அன்புடையீர்,
அனைவருக்கும் இனிய வணக்கம். மருத்துவ உலகின் ராணி சோற்றுக்கற்றாழை பற்றி அறிந்து கொள்வோம்.
தாவரவியல் பெயர்; ஆலுவேரா Aloe vera L.
தாவரக்குடும்பப் பெயர்; லைலேசியே Lillaieae
ஆங்கிலப் பெயர் ; Aloes, Indian aloes
சுகம்
தரும் சோற்றுக் கற்றாழை வீட்டிலேயே இருக்கவேண்டிய ஒரு அழகிய மூலிகை.
நமக்கும் அழகுதரும் மூலிகை. சோற்றுக்கற்றாழை = சோறு + கற்றாழை.
பஞ்சகாலங்களில் உணவாகப் பயன்படுத்தப்பட்டதால் இப்பெயர் ஏற்பட்டது.
குமரி
என்று சொல்லப்படும் சோற்றுக்கற்றாழையை தோலை நீக்கிவிட்டு உள்ளே இருக்கும்
சதைப்பத்தை சாப்பிட்டு வருவதால் வியாதிகள் குணமாகும். சோற்றுக்கற்றாழை எனத்
தமிழிலும் அலோவேரா(aloe vera) என ஆங்கிலத்திலும் அழைக்கப்படும் குமரி மருத்துவப்பயன்கள் கணக்கில் அடங்காது.
சோற்றுக்கற்றாழை மானிடத்துக்கே அது ஒரு அரிய விருந்து.
கற்றாழை பூக்கும் தாவர இனத்தைச் சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, கத்தாளை, குமரி, கன்னி. என அழைக்கப்படுகிறது. ஆங்கிலத்தில் ஆலுவேரா என்று அழைக்கப்படுகிறது.
கற்றாழையில் சோற்றுக் கற்றாழை, சிறு கற்றாழை, பெருங் கற்றாழை, பேய்க் கற்றாழை, கருங் கற்றாழை, செங்கற்றாழை, இரயில் கற்றாழை எனப் பலவகை உண்டு.
இதில் சோற்றுக் கற்றாழை மருத்துவ குணங்களுக்கென்று பயன்படுத்தப்பட்டு வருகிறது. பச்சையாக உள்ள சோற்றுக் கற்றாழை பலவகையில் உடல் வெப்பத்தைத் தணிக்கிறது.
சோற்றுக்கற்றாழையின் சிறப்புத்தன்மை என்னவென்றால் இதன் சாற்றின்
சில குறிப்பான அணுக்கூறுகள் உள்ளன. இந்த அணுக்கூறு, நம் உடலில் உள்ள நோய் தடுக்கும் செல்களில் உள்ள சில ரிசெப்டர்கள் (விரும்பி வரவேற்கும்) மிகவும் ஒத்தவையாகவும், பிடித்தமாகவும் இருப்பதால் கற்றாழை சாறு சேர்ந்த உடனேயே நோயை அழிக்கும் நடவடிக்கை பலமாக தொடங்கி விடுகிறது.
நம் உடல் செல்கள், கற்றாழை சாறால் பலமாக ஊக்குவிக்கப்பட்டு, தீய பாக்டீரியா, கழிவுப்பொருட்கள் இவற்றை சுற்றி வளைத்து விரைவாக அழித்து விடுகின்றன. இதனால் உடல் பலவிதத்தில் சுத்திகரீக்கப்படுகிறது. காயங்கள் விரைவாக ஆறிவிடுகின்றன.
கற்றாழை பூக்கும் தாவர இனத்தைச் சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, கத்தாளை, குமரி, கன்னி. என அழைக்கப்படுகிறது. ஆங்கிலத்தில் ஆலுவேரா என்று அழைக்கப்படுகிறது.
கற்றாழையில் சோற்றுக் கற்றாழை, சிறு கற்றாழை, பெருங் கற்றாழை, பேய்க் கற்றாழை, கருங் கற்றாழை, செங்கற்றாழை, இரயில் கற்றாழை எனப் பலவகை உண்டு.
இதில் சோற்றுக் கற்றாழை மருத்துவ குணங்களுக்கென்று பயன்படுத்தப்பட்டு வருகிறது. பச்சையாக உள்ள சோற்றுக் கற்றாழை பலவகையில் உடல் வெப்பத்தைத் தணிக்கிறது.
சோற்றுக்கற்றாழையின் சிறப்புத்தன்மை என்னவென்றால் இதன் சாற்றின்
சில குறிப்பான அணுக்கூறுகள் உள்ளன. இந்த அணுக்கூறு, நம் உடலில் உள்ள நோய் தடுக்கும் செல்களில் உள்ள சில ரிசெப்டர்கள் (விரும்பி வரவேற்கும்) மிகவும் ஒத்தவையாகவும், பிடித்தமாகவும் இருப்பதால் கற்றாழை சாறு சேர்ந்த உடனேயே நோயை அழிக்கும் நடவடிக்கை பலமாக தொடங்கி விடுகிறது.
நம் உடல் செல்கள், கற்றாழை சாறால் பலமாக ஊக்குவிக்கப்பட்டு, தீய பாக்டீரியா, கழிவுப்பொருட்கள் இவற்றை சுற்றி வளைத்து விரைவாக அழித்து விடுகின்றன. இதனால் உடல் பலவிதத்தில் சுத்திகரீக்கப்படுகிறது. காயங்கள் விரைவாக ஆறிவிடுகின்றன.
இது ஆற்றங்கரைகளிலும்,
சதுப்பு நிலங்களிலும், தோட்டங்களிலும் பயிராகும். இந்த இனத்தாவரம்
இந்தியாவில் ராஜஸ்தான், ஆந்திரா, குஜராத் மாநிலங்களிலும், தமிழ்நாட்டில்
சேலம் மற்றும் தூத்துக்குடி ஆகிய இடங்களில் சாகுபடி செய்யப்படுகின்றது.
இந்த தாவரம் பெரும்பாலும் வெப்ப மண்டலப் பகுதிகளில் அதிகம் வளர்கிறது.
நுனியில் பெரும்பாலும் சிறு முட்களுடன் காணப்படும் கற்றாழை மடல், வேர்
ஆகியவை மருத்துவப் பயனுள்ளவை.
அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பில்
கற்றாழையின் சோற்றுப் பகுதி பெருமளவு பயன்படுத்தப்படுகின்றது. இதன்
மகத்துவத்தை தெரிந்து கொள்ளுங்கள்….
உங்கள் உடலை அழகுபடுத்திக் கொள்ள பணம் இல்லாமல் எளிதாக கிடைக்கும்
சோற்றுக் கற்றாழை உடலை அழகுபடுத்துவது மட்டுமின்றி, பலவித நோய்களுக்கு
அருமருந்தாகவும் இருக்கிறது.
சோற்றுக் கற்றாழையின் மருத்துவப் பயன்கள் கணக்கில் அடங்காது. மருத்துவ உலகில் முக்கியத்துவம் பெற்ற சோற்றுக் காற்றாழையின் ஏ,பி,சி,ஈ விட்டமின்கள் அதிகம்.
மேலும், கல்சியம், மக்னீசியம், பொட்டாசியம், சோடியம் போன்ற தாதுக்களும் கொட்டிக் கிடக்கின்றன.
வாய்ப்புண்ணை ஆற்றவும், பற்களின் பாதுகாப்புக்கும் மிகச் சிறந்தது சோற்றுக் காற்றாழை சாறு என்பது கிராம மக்கள் அறிந்த ஒன்று.
சோற்றுக் கற்றாழையின் மருத்துவப் பயன்கள் கணக்கில் அடங்காது. மருத்துவ உலகில் முக்கியத்துவம் பெற்ற சோற்றுக் காற்றாழையின் ஏ,பி,சி,ஈ விட்டமின்கள் அதிகம்.
மேலும், கல்சியம், மக்னீசியம், பொட்டாசியம், சோடியம் போன்ற தாதுக்களும் கொட்டிக் கிடக்கின்றன.
வாய்ப்புண்ணை ஆற்றவும், பற்களின் பாதுகாப்புக்கும் மிகச் சிறந்தது சோற்றுக் காற்றாழை சாறு என்பது கிராம மக்கள் அறிந்த ஒன்று.
மாறாத இளமை தோற்றம் வேண்டுமா?
கற்றாழை ஜெல்லை (சோறு) சுத்தமான நீரில் 7 முறை கழுவி சுத்தம் செய்து,
தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர உங்கள் இளமை என்றும்
ஊஞ்சலாடிக் கொண்டே இருக்கும்.
மாலை வரை மாறாத நறுமணம்
கடைகளில் விற்கும் பர்ஃப்யூம், மாய்சரைசர் போன்றவற்றில் ரசாயனப் பொருட்கள்
உபயோகிப்பதனால் அவை தோலில் பாதிப்பை உண்டாக்கும். ஆனால் சோற்றுக் கற்றாழை
சோற்றுப்பகுதியை உடலில் தேய்த்து வர கஸ்தூரி மணம் வீசும். சருமம் வறண்டு
போகாமல் ஈரப்பதத்துடன் ஜொலிக்கும்.
மாசு மருவற்ற முகப்பொலிவிற்கு….
கற்றாழை ஜெல்லை பசு மோரில் கலந்து குடித்து வர உடல் சூட்டினால் முகத்தில்
வரும் பருக்கள், வெயிலினால் தோலில் ஏற்படும் அலர்ஜி மற்றும்
கருந்திட்டுக்கள் மறைந்து போகும்.இதன் ஜெல்லை முகத்தில் தேய்த்துக் கழுவி
வந்தால் முகம் அப்பழுக்கில்லாத பளிங்கு போல் ஜொலிக்கும்.
ஆறடி கூந்தல் வேண்டுமா?
கற்றாழை மடலைக் கீறி சாறெடுத்து, அதை தேங்காய் எண்ணெயுடன் கலந்து 40
நாட்கள் வெயிலில் வைத்து இதை தலைக்கு தொடர்ந்து தேய்த்து வாருங்கள்.
தலைமுடி நன்கு செழித்து வளரும். வாரம் இருமுறை இந்த எண்ணெயை உடலுக்குத்
தேய்த்து குளிப்பதால் குளிர்ச்சி ஏற்படுவதோடு, உடலுக்கு வனப்பும் ஏற்படும்.
இந்த சோற்றுக் கற்றாழைத் தைலம் அல்லது எண்ணெய் நாம் வீட்டிலேயே
தயாரிக்கலாம்.
மாதவிலக்கு பிரச்னை தீர…
கற்றாழை எண்ணெய் பெண்களின் மாதாந்திர பிரச்னையை ஒழுங்குபடுத்தும்.
கர்ப்பவதிகளுக்கு கருச்சிதைவை குறைக்கும். காலை வெறும் வயிற்றில் சிறு
துண்டுகள் தினம் சாப்பிட்டு வர உடலில் சத்து கூடும். உடல் பருக்காமல்
பலகீனம் மறையும். தாதுவிருத்தி ஏற்படும். பிள்ளைப்பேறு வேண்டுபவர்கள்கூட
இதை சாப்பிட்டுவந்தால் நாளடைவில் நல்ல முன்னேற்றம் பெறலாம்.
முட்டு வலிக்கு….
வைட்டமின் சத்துகள் குறைவதால் மூட்டுகளுக்கு இடையே உள்ள கூழ் போன்ற திரவம்
குறைகிறது. இதனால் மூட்டுவலி ஏற்படுகிறது. அதிலும் பெண்களுக்கு மூட்டு வலி
பாதிப்புகள் ஆண்களைவிட சற்று கூடுதல் தான். இவற்றை சரியான நேரத்தில்
சரிசெய்யாவிட்டால் மூட்டு வலி என்பது குணப்படுத்த முடியாத ஒரு நோயாக மாறி
விடக்கூடும். இதில் உள்ள ஊட்டச் சத்துகள் நிறைந்த தண்ணீர் உடலில் குறைவாக
உள்ள நீர்ச் சத்தை அதிகப்படுத்தி மூட்டுகள் சரியாக இயங்குவதற்குத் தேவையான
கூழ் போன்ற திரவத்தை உற்பத்தி செய்ய உதவுகிறது. மனித உடலில் மடிந்து போன
செல்களை மீண்டும் உயிர்ப்பித்து எல்லா வகையான மூட்டு வலிகளுக்கும் கற்றாழை
பானம் நிவாரணம் அளிக்கிறது.
முகத்தின் சுருக்கம் நீங்க….
நமது தோலில் நீரை விட நான்கு மடங்கு வேகமாக கற்றாழைச் சாறு ஊடுருவக்
கூடியது. வைட்டமின் சி மற்றும் பி சத்துகளும் தாதுக்களும் நிறைந்தது
இச்சாறு. சருமத்திலுள்ள கொலாஜன் எனப்படும் கொழுப்பு சத்தை குறைக்கக்கூடிய
புரோட்டீன் கற்றாழையில் அதிகம் காணப்படுவதால் முகத்திலுள்ள சுருக்கம்
வயோதிக தோற்றத்தை குணப்படுத்துகிறது.
வெள்ளை நோய் குணமாக…
பெரிய கற்றாழை மடலை நீளவாக்கில் கீறிப் பிளந்து இதில் மூன்று தேக்கரண்டி
அளவு வெந்தயத்தைப் பதித்து மூடி, நூலால் கட்டி இரவு முழுவதும் வைத்து
எடுத்தால், மூன்றாவது நாளில் பிரித்துப் பார்க்கும் போது வெந்தயம் முளை
கட்டியிருக்கும். இந்த வெந்தயத்தை மூன்று பாகமாக்கி மூன்று தினங்கள்
சாப்பிட்டால் பெண்களுக்கு ஏற்பட்ட வெள்ளை நோய் குணமாகும்.
குளியலுக்கு….
மூலிகைக் குளியல் எண்ணெய் தயாரிக்க, சோற்றுக் கற்றாழை சோற்றுப் பகுதியை
அரைக்கிலோதயாரித்து ஒரு கிலோ நல்லெண்ணெய் சேர்த்து கடும் வெயிலில் 30
தினங்கள் வைத்து எடுத்து வடிகட்டிக் கொள்ள வேண்டும். எண்ணெய்பசுமை நிறமாக
மாறிவிடும். இதில் தேவையான வாசனையைக்கலந்து வைத்துக் கொண்டு, குளியலுக்குப்
பயன்படுத்தினால் குளிர்ச்சிதரும் ஆயில் ஆகும்.
மருத்துவ உலகின் ராணி சோற்றுக்கற்றாழை :
சோற்றுக் கற்றாழையின் மருத்துவப் பயன்கள் கணக்கில் அடங்காது. மருத்துவ
உலகில் முக்கியத்துவம் பெற்ற சோற்றுக் காற்றாழையின் ஏ, பி, சி, ஈ
வைட்டமின்கள் அதிகம். மேலும், கால்சியம், மக்னீசியம், பொட்டாசியம், சோடியம்
போன்ற தாதுக்களும் கொட்டிக் கிடக்கின்றன.
கற்றாழை சோற்றை உள்ளுக்கு ஒரு
கரண்டியளவு சாப்பிட்டு வர வெப்ப நோய்கள் யாவும் தீரும்.சர்க்கரை நோய்க்கு
கண் கண்ட மருந்தாகவும் சோற்றுக்கற்றாழை திகழ்கிறது.
இதை ஜூஸாக தொடர்ந்து
எடுத்துக் கொள்வதன் மூலம் ரத்கத்தில் சர்க்கரை அளவு கட்டுப்படும். உடலில்
நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும்.
வாய்ப்புண்ணை ஆற்றவும், பற்களின்
பாதுகாப்புக்கும் மிகச் சிறந்தது சோற்றுக் காற்றாழைச் சாறு என்பது கிராம
மக்கள் அறிந்த ஒன்று.
தீக்காயத்தை எளிதில் ஆற்றும். மூட்டு வாதத்தில்
இருந்து விடுதலை, உடலின் புரதத்தை கூட்டுவது, செரிமானம் என பல
பிரச்சினைகளுக்குத் தீர்வாக இருக்கும் சோற்றுக்கற்றாழை, உடலுக்குத்
தேவையில்லாத தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களையும் வெளியேற்றும்.
அடிபட்ட
வீக்கங்களுக்கு வைத்து கட்டி னால் வீக்கம் தீரும்.
கோடைகாலத்தில் உருவாகக் கூடிய நீர்கடுப்பு, நீர்தாரை எரிச்சல், மாதவிடாய்
கோளாறுகள், உடல் வெப்பம், உடல்காந்தல் போன்ற பாதிப்புகளுக்கு, சோற்றுக்
கற்றாழை உள்ள நுங்கு (சோறு) போன்ற சதையை எடுத்து சுத்தமானநீரில் அலசிக்
கொள்ள வேண்டும். பிறகு அதற்குச் சமமானஅளவில் பனங்கற்கண்டினை அத்துடன்
சேர்த்து காலை, மாலை இருவேளைகளிலும் உண்டு வரவேண்டும். இதனால் உடல்
வெப்பமும் எரிச்சலும் குறையும்.
வெயில் காலத்தில் சிலருக்கு கண்களில்
எரிச்சல் உண்டாகி, கண்கள் சிவந்து விடும். அப்போது, கற்றாழையின் ஒரு துண்டை
எடுத்து அதன் நுங்குப் பகுதி வெளியே தெரியும்படி இரண்டாகப் பிளந்து,
கண்களை மூடி கண்களின் மீது அந்தக் கற்றாழை துண்டை வைத்துக்கொண்டு சற்று
நேரம் அப்படியே படுத்திருக்க வேண்டும். இப்போது கண் எரிச்சல், குறைவதோடு,
சிவந்த நிறமும் மறைந்து விடும். இதை இரவு நேரங்களில் தூங்குவதற்கு முன்
செய்துவந்தால் நல்ல உறக்கம் வருவதோடு, உடலுக்கு பல நன்மைகளும்
கிடைக்கும்.
சிலருக்கு தூங்கி எழுந்ததும் பாதத்தின் அடியில் நெருப்பை
மிதித்ததுபோல, எரிச்சலாக இருக்கும். இதைப் போக்க இரவு படுக்கும் முன்
கற்றாழையின் நுங்கு போன்ற சோற்றை பாதத்தின் அடியில் தடவிக்கொண்டு
படுக்கலாம். பாத எரிச்சல் குறைவதோடு, பாதவெடிப்புகளும் குணமாகும்.
சோற்றுக்
கற்றாழையில் செய்த தைலத்தை தலைக்குத் தேய்த்துக் குளிப்பதால் உடல் சூடும்,
எரிச்சலும் குறைந்து உடல் குளிர்ச்சியடையும், உடலில் எந்தப் பிரச்சினையும்
இல்லாதவர்கள் இந்த எண்ணெயை தினமும் தலைக்குத் தடவி வரலாம்.
சோற்றுக்
கற்றாழையின் சோறு 7முறை கழுவியது 1 கிலோ, விளக்கெண்ணெய் 1 கிலோ,
பனங்கற்கண்டு அரை கிலோ, வெள்ளை வெங்காயச்சாறு அரை கிலோ ஆகியவற்றை கலந்து
சிறுந்தீயில் பதமாகக் காய்ச்சி வடிகட்டி இரண்டுவேளை 15 மில்லியளவு
குடித்துவர மந்தம், வயிற்று வலி, பசியின்மை, குன்மக் கட்டி, ரணம்,
புளியேப்பம், பொருமல் ஆகியவை குணமாகும்.
நீடித்த மலச்சிக்கலைப் போக்குவதில்
மிகவும் சிறப்பானது. செரிமான சக்தியை அதிகரிக்கும். பசியை உண்டாக்கும்.
கற்றாழையில் தயாரித்த எண்ணெயை 5 மில்லி அளவு (1 தேக்கரண்டி) 2 வேளைகுடித்து
காரம், புளி உள்ள உணவு வகைகளை நீக்கி சாப்பிட்டு வர மேக நோய் குறையும்.
எரிச்சல், நீர்க்கசியும் கிரந்தி, அரிப்பு, தினவு, மஞ்சள் மற்றும் சிவப்பு
நிறத்தில் நீர் ஒழுகுதல், தாது இழப்பு, அரையாப்பு, தொடைக்கட்டி, அக மற்றும்
புற உறுப்புகளில் உள்ள இரணங்கள், சீழ் வடிதல், மலச்சிக்கல் ஆகியவை
குணமாகும். வெள்ளை வெட்டை நோய்கள் ஆகியன பூரணமாக குணமாகும். மருந்து
சாப்பிடும் காலங்களில் காரத்தையும், புளியையும் சேர்க்காமல் உணவு உட்கொள்ள
வேண்டும்.
வயிற்றுப்புண் ஆற ….
சோற்றுக் கற்றாழை மடல் சுத்தம் செய்து எடுத்து, இதில் சிறிது
படிக்காரத்தூளைத் தூவினால் நீர்த்து தண்ணீராகிவிடும். இதில் வெண்ணெய்,
கற்கண்டு, வால் மிளகுத் தூள் சேர்த்து, சாப்பிட்டால் மூத்திரக் கிரிச்சரம்,
மேக நோயால் ஏற்பட்டவெட்ட நோய் நீங்கிவிடும். கழுவிச் சுத்தம் செய்த
சோற்றுக்கற்றாழை ஒரு கப் செய்து எடுத்துக் கொண்டு, இதில் சிறிய வெங்காயம்
ஒரு கப் நறுக்கிச் சேர்த்து விளக்கெண்ணெய் 300 கிராம், பனங்கற்கண்டு 300
கிராம் இவையாவையும் ஒன்று சேர்த்து அடுப்பில் வைத்து சிறு தீயாக லேகிய பதம்
வரும் வரை எரித்து எடுத்து கொள்ள வேண்டும். இதை காலை, மாலை, ஒரு
தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால் அனைத்துவகையான வயிற்று வலியும்,
வயிற்றுப் புண்களும் குணமாகும்.
சிறுநீர் எளிதில் வெளியேற…
கழுவி` எடுத்த சோற்றுக் கற்றாழையில் ஒரு மடல் அளவு கற்றாழைத் துண்டுகளை
நீர் ஆகாரத்தில் கலந்து குடிக்க வேண்டும். மடல் துண்டுகள் ஐந்து
தேக்கரண்டிக்குக் குறையக் கூடாது இதை, காலையில் ஒருவேளை சாப்பிட வேண்டும்.
மூன்று நாள் உபயோகத்தில் சிறுநீரில் இரத்தம் கலந்து வருதல் நின்று விடும்.
இதே முறையில், மூன்று தினங்கள் சாப்பிட்டால் நீர்த்தாரை எரிச்சல்
குணமாகும். கழுவிச் சுத்தம் செய்த கற்றாழைத் துண்டுகளை ஒரு கப் எடுத்துக்
கொண்டு, இதில் சின்னவெங்காயம் சுட்டுப் பொடியாக்கிய ஐந்து வெங்காயத்துக்கு
குறையாமல் சேர்த்துக் கொண்டு, இந்த கற்றாழைச் சோற்றில் கலந்து, கடுக்காய்
பொடிகள் மூன்று கடுக்காயில் சேகரித்து, எல்லாவற்றையும் ஒன்றாக்கி சிறிது
தண்ணீர் விட்டு மூடிவத்தால், கால் மணி நேரத்தில் நீர்த்து தண்ணீராகிவிடும்.
இந்தத் தண்ணீரை வடிகட்டிச் சாப்பிட்டால் அரை மணிநேரத்தில் சிறுநீர்க்கட்டு
நீங்கிவிடும். தாராளமாக சிறுநீர்வெளியேறிவிடும்.
புண்கள் ஆற….
கழுவி எடுத்த கற்றாழைச்சோறு 25 - 50 கிராம் பசும் பாலில் கலந்து காலை, மாலை
சாப்பிட்டு வந்தால் பத்து தினங்களில் மூலச் சூடு தணியும். சொறி, அரிப்பு
நீங்கும். விந்து உற்பத்தி அதிகரிக்கும் தீக்காயங்களுக்கும் ‘உடனடி
டாக்டர்’ கற்றாழைச் சாறுதான்.
கண்களில் அடிபட்டால்….
கண்களில் அடிபட்டதாலோ, இதர காரணங்களாலோ கண் சிவந்து வீங்கியிருந்தால்
கற்றாழைச்சோற்றை வைத்துக் கட்டி இரவு தூங்கினால் வேதனை குறையும். மூன்று
தினங்களில் நோய் குணமாகும். கற்றாழைச் சோற்றில் சிறிதுபடிக்காரத்தூள்
சேர்த்து, ஒரு துணியில் முடிச்சுக் கட்டி, தொங்கவிட்டு ஒரு பாத்திரத்தை
வைத்து நீர்சொட்டுவதைச் சேகரம் செய்து எடுத்துக்கொண்டு, இதைச் சொட்டு
மருந்தாக கண்களில் விட்டுவந்தால், கண்நோய்கள், கண்களில் அரிப்பு, கண்
சிவப்பு மாறும். குளிர்ச்சி தரும் ஆண்கள் சவரம் செய்யும் பொழுது ஏற்படும்
கீறல் காயங்களுக்கும் உடனடி நிவாரணம் பெற கற்றாழைச் சாறை பயன்படுத்தலாம்.
தாம்பத்திய உறவு மேம்பட
சோற்றுக் கற்றாழை வேர்களைவெட்டி, சிறிய துண்டுகளாகச் செய்து சுத்தம்
செய்து, இட்லிப்பானையில் பால்விட்டு வேர்களைத் தட்டில் வைத்துப்
பால்ஆவியில் வேகவைத்து எடுத்து, நன்கு காயவைத்துப் பொடி செய்துவைத்க்து
கொண்டு, தினசரி ஒரு தேக்கரண்டி பாலில் கலந்துசாப்பிட்டு வந்தால்,
தாம்பத்திய உறவு மேம்படும். தாம்பத்திய உறவுக்கு நிகரற்ற மருந்தாகும்
வேலியோரங்களில் வளரும் கற்றாழை செடிகளை நாம் கவனிப்பதில்லை…ஆனால்
பெரிய கம்பெனியாளர் ஹெல்த் ட்ரிங், ஆலுவேரா ஷாம்பு, குளியல் சோப், அழகு
சாதனப் பொருட்கள் அனைத்திலும் பயன்படுத்தப்படுவதாக விளம்பரம் செய்து
பளபளப்பான பெட்டிகளிலும், பாட்டில்களிலும் அடைத்து விற்றால் அதை வாயைப்
பிளந்து கொண்டு வாங்குகிறோம்.
பெண்களே…மருத்துவத்திலும், அழகு
சாதனப் பொருட்களிலும் ராணியாக விளங்கும் கற்றாழையை நீங்கள் ஏன் உங்கள்
வீட்டில் வளர்க்கக் கூடாது?
இடம் இல்லாதவர்கள் உங்கள் வீட்டு பால்கனியில்
தொட்டிகளில் வளர்க்கலாமே!…

Hi jadesamy I am logu from eruttipalayam
ReplyDeleteI need red aloe I you have pl inform
Thanks
Hi I have red aloe Vera.
DeleteHi I have .your contact number
ReplyDeleteI too need red aloe vera...
DeleteMy contact and whatsapp # 9965435964
I have need red aloe vera
ReplyDeleteContact & whaWhats 919750696337
ReplyDeleteI have need red aloe vera
Contact & whaWhats 919750696337
I need red aloe vera , contact me ,WhatsApp number 9080079250
ReplyDeleteசிகப்பு கற்றாழை வளர்ப்பதற்கு வேண்டும் எங்கே கிடைக்கும்
ReplyDeleteCall me for red aloe vera. 8883755778
ReplyDeleteI have red aloevera under 10 acre. Contact 8883755778.
ReplyDeleteWhere to get one or two red Aloe vera seedlings for planting in pots .What is the cost and contact number
ReplyDelete