Saturday, 25 July 2015

நாடி,வாயு,தாது வகைகளும்,தொடர்பும்

அன்புடையீர்,
       அனைவருக்கும் இனிய வணக்கம்.
நாடிவாயுதாதுஇவற்றுக்குள்ள தொடர்பு
      நாடிகள் பத்துள் இடகலைபிங்கலைசுழுமுனை ஆகிய மூன்றும் சிறப்புடையன. வாயுக்களை மேற்கண்ட மூன்று நாடிகளின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
   இடகலை வாத நாடியாகவும்பிங்கலை பித்த நாடியாகவும்சுழுமுனை ஐய நாடியாகவும் குறிப்பிடப்படும். 
வாயுக்கள் பத்து வகைகளில் 
        அபானன்பிராணன்சமானன் ஆகிய மூன்றும் வாதம்பித்தம், கபம் என்னும் ஐயம் ஆகிய நாடிகளுடன் இணைந்திருக்கும். 
          அதேபோலதாதுக்கள் ஏழின் குணங்களையும் நலன்களையும் அறிய வேண்டுமானால்வாத பித்த ஐய நாடிகள் எவ்வாறு இயல்பாகவும் இயல்புக்கு மாறாகவும் இயங்குகின்றன என்பதைக் கொண்டே அறிந்திட இயலும்.
        எனவேநாடிவாயுதாதுக்கள் ஆகியவை உடலை இயக்கவும்காக்கவும்தாக்கவும்அழிக்கவும்ஆக்கவும் காரணிகளாக அமைகின்றன என்பது அறிய முடிகிறது.
 . இவற்றின் இயக்கம் சீராகவும்முறையாகவும் அமைந்தால் உடல் நோயற்று இருக்கும்.அவை சீராக அமையாமல் முறை தவறினால் நோயோ நோய்க்குரிய பிற குற்றங்களோ உடலுக்கு நேரும்.

No comments:

Post a Comment