Saturday, 25 July 2015

மூலிகைகள்...

அன்புடையீர், 
        அனைவருக்கும் இனிய வணக்கம்.


மூலிகை எனக் கொண்ட மரம், செடி, கொடி ஆகிய அனைத்தையும் பாதுகாப்பதில் சைவத் திருக்கோயில்கள் அதிக ஆர்வம் கொண்டன வாகக்காணப்படுகின்றன. சைவத் திருக்கோயில்கள் (தமிழ கத்தில் உள்ளவை மட்டும்) அனைத்திலும் தல விருட்சம் எனும் பெயரில் ஏதேனும் ஒரு மூலிகைக் குணங்கொண்ட தாவரத்தைப் பாதுகாக்க முற்பட்டிருக்கின்றன.

ஏகமூலிகை : ஏகமூலிகை என்பது கையான் தகரையைக் குறிக்கும். முறைப்படி செய்தால் அம்மூலிகை 9 உலோகங்கள், 64 பாடாணங்களையும் புடமிட்டுப் பற்பமாக்கப்பயன்படும். அதனாற்றான் அதற்கு அப்பெயர். 
வேலு மூலிகை:“பல்லுக் கடுத்த பலநோ யகற்றியரைக் கல்லுக்கு நேராகக் காட்டுமே’’ வேல் என்னும் மூலிகை பற்களின் நோய்கள் பலவற்றையும் நீக்கு வதுடன், பற்களை வலிமையடையச் செய்து கற்களைப் போல உறுதிப் படுத்தும்.
பூனைக்காலி : வாத, பித்த, ஐயம் என்னும் இம்மூவகைக் குற்றங்களால் வரும் நோய்களைப் போக்கும்.
காந்தனள் : சங்க இலக்கியம் குறிப்பிடும் காந்தளை. அதன் கிழங்கு ஏர்போல வளைந்து காணப்படுவதனால் கலப்பைக் கிழங்கு என்றும் பெயர் பெறும். அக்கிழங்கின் மேல்பகுதியும் கீழ்ப் பகுதியும் பண்பால் வேறு பட்டவை. ஒரு பகுதி இதய ஓட்டத்தை ஊக்குவிக்கும். மறுபகுதி, எதிராகப் பணிபுரியும். அதில் அடங்கிய கோகோசின் என்ற அல்கலாய்ட் புற்றுநோய்க்கு நல்ல மருந்து. விஷமும் அதில்; மருந்தும் அதில். அமுதமும் நஞ்சும் ஒரே இடத்து
என்னும் சிறப்பிற்குரியதாகக் கூறப்படுகிறது. இவ்வாறான சிறப்புகள் மட்டுமல்லாது மேலும் பல சிறப்புகளைத் தன்னகத்தே கொண் டிருப்பவை மூலிகைகளாகும்.
அவுரி, ஓரிலைத் தாமரை, செவ்வல்லி, பிளியறணை, அமுரி, கோவை, பிடர்முக்கி, கொடியொளிச் சிகப்பு, செந்திராய், கரிய சாலை, சிறுகீரை ஆகியவற்றின் சாற்றைத் தனித்தனியே பாண்டத்தில் வைத்து,வெண்கரு, குன்றி, சீனம் இவற்றைப் பொடி செய்து, மேற்கண்ட சாற்றில் போட்டுக் காய்ச்சும் போது தாரம், இந்துப்பு, மெழுகு, வெண்ணை சேர்த்து மூடிசீலை செய்து எரித்தெடுத்து,அதன் சாம்ப லுக்கு எட்டுக்கு ஒன்று ஆவின் நெய், வெண்காரம், வெல்லம், குன்றி இவற்றைச் சேர்த்துப் பிசைந்து, பத்துக்கு ஒன்று குடோரி சேர்த்து மூன்று நாள் அரைத்து வெய்யலில் காய வைத்துசரஉலையில் ஊத மூலிகை செம்பாகும்
என்பதனால், மூலிகையிலிருந்து செம்பு உருவாகும் என்பதுடன்,
இந்தச் செயற்கைச் செம்பினால் செய்யப்படுகின்ற மருந்து வீரிய மிக்கதாகவும் நோயையும், நோயின் மூலத்தையும் அழிக்க வல்லதாகவும் இருக்கு மென்பர்.
"" விழலாகப் போகாமல் கரிசாலை கரந்தை
மிக்கான பொற்றலையும் நீலிவல் லாரை
பழலாகப் பாக்களவு பாலில் கொள்ளு
பாங்கான மண்டலந்தான் உண்டா யானால்
கழலாக காயந்தான் ஆயிரத் தெட்டு
கனகம்போல் சடந்தானும் கனிந்து மின்னும்
மழலாக வார்த்தையது கின்னரத்தின் ஒலியாம்
மகத்தான வாசியுமே இறுகும் பாரே.''
கரிசாலை, கரந்தை, பொற்றலை, நீலி, வல்லாரை ஆகிய ஐந்து மூலிகைகளைத் தினமும் பாக்களவு ஒரு மண்டலம் உண்டு வந்தால், உடல் ஆயிரத்தெட்டு மாற்றுப் பொன்னாகக் கனிந்து மின்னுவதுடன், குரல் கின்னரம் போன்ற இனிமை யானதாகவும்மூச்சும் இறுகி உடலை வளப்படுத்தும் என்று தெரிகிறது.
கறுப்பு மூலிகை
மூலிகைகள் இயல்பாக இருக்கும் நிறத்திலிருந்து மாறுபட்டு கறுப்பு வண்ணத்தில் அவற்றை வளர்த்து அதைக் கற்பமுறையில் உண்டால், நீண்ட நாள் வாழலாம் என்பது சித்தர்களின் கருத்தாக இருக்கிறது.
இரண்டாள் மட்டம் குழியில் நிறையச் சேங்கொட்டையைப் போட்டு மூடி, அதன்மேல் கரு நெல்லி, கருநொச்சி, கஞ்சா, கொடி வேலி வைத்து வளர்க்க அவை கருத்து வளரும். அவற்றை முறையாக உண்ண கற்பமாகும்.
இடுப்பளவு குழியில் சேங்கெட்டை இரண்டு முழ உயரம் கொட்டி, மண்போட்டு மூடி, நீர் பாய்ச்சி நன்றாக அழுகச் செய்து மூன்று திங்களுக்குப் பின்,
குமரி, ஓமம், கஞ்சா, வல்லாரை, கரிசாலை, செருப்படி, நீலி, வீழி, பொற்றலை, நொச்சி, கரந்தை, மத்தை, தும்பை, கொல்லன் கோவை, வாழை ஆகியவற்றைப் பதியமிடவும். அவை நன்றாக வளர்ந்து காய்ந்த பின் அவ்விதைகளை முன்போலவே சேங்கெட்டை யிட்டுப் பாத்திக் கட்டி, வளர்த்துஇவ்வாறு நான்கு முறை வளர்த்தால் சிறப்பான கருப்பு மூலிகையாகும். இவ்வகை மூலிகைகைளை மலைதோறும் சித்தர்கள் வளர்த்துள்ளார்கள். அவ்வகை இலையைக் கசக்கி, கொக்கின் இறகில் பூச, அவ்விறகு காக்கை நிறம் போலாகும். அவ்விலைகளைத் தின்றால் காய சித்தி அடைந்து பல்லாண்டு வாழலாம். மேற்கண்டவாறு வளர்க்கப் பெற்ற கறுப்பு மூலிகை களை உண்டு காயசித்தி பெற்ற சித்தர்கள் வருமாறு:
மச்சமுனி வல்லாரை பலர் குமரி
கமலமுனி கொடுவேலி காலாங்கி ஓமம்
பிரமமுனி செறுப்படை சிவயோகமுனி இராமதேவர் கரிசாலை
வாசமுனி பொற்றலை பிரமமுனி நீலி
கோரக்கர் கஞ்சா/பொற்றலை கஞ்சமலைச் சித்தர் வீழி
கொங்கணர் கரிசாலை பதஞ்சலி கரந்தை
சொரூபாநந்தர் திருமேனி நந்தீசர் கோவை
போகர் கொல்லங் கோவை
மேற்கண்டவர்கள் மூலிகைகளை முறைப்படி உண்டு காயசித்தி பெற்று நீண்ட நாள் வாழ்ந்திருந்ததாக அறியப்படுவதனால் மூலிகையின் சிறப்புகள் அறியப்படும்.
மூலிகைகளைப் பற்றிய அறிவு சித்தர்களிடையே மிகுந்திருந் தற்குச் சான்றாகக் கீழ்க்கண்ட பாடல் விளங்கக் காணலாம்.
"" போக்கான கிளிமூக்கு மரமொன் றுண்டு
புகழான கிளிபோலக் காயும் காய்க்கும்
வாக்கான இலையதுவும் அரசிலை போற்காணும்
மைந்தனே இதனுடைய பழத்தை உண்ணு
நோக்கான வழிநடக்கச் சுறுக்காய் ஓடும்
நொடியிலே காயசித்தி கிடைக்கு மப்பா
போக்கான பூ பூத்த மற்றாநாள் பழமாம்''
என்று, கிளிமூக்கு மரம் அதன் காயின் வடிவத்தால் ஆகுபெயராய் அம்மரத்திற்குப் பெயர் அமைந்துள்ளது. இலையின் வடிவம், பூ பூத்த மறுநாளே பழம் பழுக்கும் என்னும் அரிய செய்தியுடன்,அதன் பழத்தை உண்ட உடனே காய சித்தி கிடைக்குமென்று கூறுவதைக் காணும் போது, மூலிகைகளைச் சித்தர்கள் நுட்பமாக ஆராய்ந்திருந்ததை உணரலாம்.
 போக்கான கிளிமூக்கு மரம தொன்று
புகழான கிளிபோலக் காயும் காய்க்கும்
வாக்கான இலையதுவும் அரசிலை போற்காணும்
மைந்தனே இதனுடைய பழத்தை உண்ணு.
என்று, பிறநூல்களும் ஒத்த பாடல்களால் அம்மரத்தைப் பற்றி கூறக் காணலாம்
இந்தியா முழுவதும் ஏறக்குறைய 8,000 மூலிகைகள் பல்வேறு மருத்துவப் பயன்பாடுகளில் பயன்படுத்தப் படுகின்றன. சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம் போன்ற மருத்துவ முறைகள் ஒவ்வொன்றிலும்,சராசரியாக 1700 முதல் 1900 மூலிகைகள் வரை பயன்படுத்தப் படுகின்றன. இவை தவிரவும், கிராமிய மருத்துவ முறைகளில் (ஊணிடூடு டஞுச்டூt tணூச்ஞீடிtடிணிண) பயன் படுத்தப்படும் மூலிகைகளின் எண்ணிக்கை அதிகமானதாக உள்ளதைப் பெங்களூரைத் தலைமை யிடமாகக் கொண்டு செயல்படும் பாரம்பரிய மருத்துவ மறுமலர்ச்சி அறப் பேரவை தகுந்த ஆதாரங்களுடன் தெரிவித்துள்ளது. இந்தியா முழுவதும் ஏறக்குறைய 15,000 பூக்கும் வகைத் தாவரச் சிறப்பினங்களில் பாதியளவு தாவரங்கள் மருத்துவப் பயன்பாடு உள்ளவை என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தைப் பொறுத்த அளவில், ஏறக்குறைய 2000 தாவரங்கள் பல்வேறு மருத்துவ முறைகளில் பயன்படுத்தப் படுகின்றன. இதில் பல தாவரங்கள் தமிழகத்தில் விளையாமல், பத்து சதவீதம் இந்தியாவின் பிற பகுதிகளிலிருந்து எடுக்கப்பட்டு, கச்சா மருந்துகளாகக் கிடைக்கின்றன என்று மருத்துவ மூலிகை ஆய்வறிஞர் முனைவர். என். லோகநாதன் தெரிவிக்கிறார்.’’

No comments:

Post a Comment