Saturday, 25 July 2015

வாயுக்களும் உடலுக்கான அவற்றின் இயக்கமும்.

அன்புடையீர்,
       அனைவருக்கும் இனிய வணக்கம். இந்தப்பதிவில் வாயுக்கள் என்பது பற்றி காண்போம்.

வாயுக்கள்
           நாடிகள் பத்து என்று உரைக்கப் பட்டதைப் போலவாயுக்களும் பத்து என்பர். நாடிகளின் இயக்கத்துடன் இணைந்து வாயுக்களும் இயங்குவதால்நாடிகளைப் போல வாயுக்களும் சிறப்புடையவை யாகக் கருதப்படும்.
 
வாயுக்கள் பத்து வருமாறு
       பிராணன்அபானன்வியானன்உதானன்கூர்மன்தேவதத்தன்சமானன்நாகன்கிரிகரன்தனஞ்செயன் என்பனவாகும்.
 
வாயுக்களின் இயக்கம்
            நாடிகளைப் போல வாயுக்கள் உடலில் ஒவ்வோர் இடத்தில் அமைந்து இருப்பதுடன் ஒவ்வொரு தொழிலைச் செய்வதாகக் குறிப்பிடப்படுகின்றன.
 
வாயுக்களின் இயக்கம் விபரம்
      1. பிராணன் – மூலாதாரத்திலிருந்து புறப்பட்டு இடகலைபிங்கலை இவற்றின் நடுவாகச் சென்று சிரசை முட்டிமூக்கின் வழியாக வெளியே பாயும். நெஞ்சில் நின்று ஓடும்.
 
2. அபானன் – மலநீர்களைக் கழிக்கும்.
 
3. வியானன் – உணவின் சாரத்தை உடல் முழுவதும் பரவச்செய்து வலிமையளிக்கும்.
 
4. உதானன் – கழுத்தில் நின்று உணவுநீர் இவற்றின் சாரத்தை உடல் முழுவதும் பரவச் செய்து வளர்க்கும்.
 
5. கூர்மன் – கண்ணை இமைக்கச் செய்யும்.
 
6. தேவதத்தன் – கொட்டாவிஉடம்பு முறுக்கலை உண்டாக்கும்.
 
7. சமானன் – நாடியுடன் கூடிய உணவைச் செரிக்கச் செய்யும்.
 
8. நாகன் – மனத்தில் கலைகளை உண்டாக்கும்.
 
9. கிரிகரன் – தும்மலை உண்டாக்கும்.
 
10. தனஞ்செயன் – உயிர்போன பின்னரும் சிரசில் நின்று உடலை வீங்கச் செய்யும். இதுவே இறுதியில் மண்டை யைக் கிழித்துக் கொண்டு வெளியே போகும்.
 
         பிராணன் என்னும் வாயு மூக்கின் வழியாக உள்ளே சென்றுசிரசில் முட்டிநெஞ்சின் வழியாக மூலாதாரம் சென்று திரும்பி மீண்டும் மூக்கின் வழியாக வெளியே வரும். மூக்கின் வழியாக உள்ளே செல்லும் போது பன்னிரண்டு அங்குல மூச்சுக் காற்று உள்ளே செல்லும்வெளியே வரும் போது நான்கு அங்குலம் பாழாகும் என்பர்.
 
          இவ்வாறுபிராணன் என்னும் வாயு நாழிகை ஒன்றுக்கு முன்னூற்று அறுபது முறையும்நாளொன்றுக்கு இருபத்தோராயிரத்து அறுநூறு முறையும் மூச்சாக இயங்கும். இவ்வாறு இயங்கும் மூச்சுக் காற்றில் 7200 மூச்சு வெளியே வந்து பாழாகிப் போகிறது. இப்பாழ் நிகழாமல் மூச்சுப் பயிற்சியான பிராணாயாமம் மூலம் உள்ளே சென்ற மூச்சுக் காற்றை உள்ளே இருத்திக் கொண்டால் மரணமில்லை என்பர்.

No comments:

Post a Comment