அன்புடையீர்,
அனைவருக்கும் இனிய வணக்கம்.
சித்த மருந்தியல் தத்துவப்படி, உடலானது ஐம்பூதங் களாலும், அப்பூதங்களின் தொகுதியான மூன்று உயிர்த் தாதுகளாலும் (வாதம், பித்தம், ஐயம்) ஆனது. இம்மூன்று தாதுகளும் இயற்கைப் பிறழ்ச்சியாலும், உணவாதிக் குறைகளாலும், கோள்களின் பேதங் களாலும், தம் நிலை பிறழும் போது முக்குற்ற நிலை அடையும்.
வாதம், பித்தம், கபம் என்னும் ஐயம் ஆகிய மூன்றின் நிலைப்பிறழ்ச்சியால் நோய்கள் தோன்றும். வாதம் இயக்கும், பித்தம் இயங்கும் , ஐயம்(கபம்) நிறுத்தும் , மூன்றில் எது பழுதடைந்தாலும் வாழ்வின் பயணம் தடைப்படும்.
இந்நிலைப் பிறழ்ச்சியால் உடலில் ஏற்படும் மாறுதல்களை அனுமானமாகக் கொண்டு நோயின் நிலை கணிக்கப்படும். இந்த அனுமானங்களே இன்ன நோய் என்று தீர்மானிக்க உதவும். மருந்தைத் தீர்மானிக்கும் போதும் இத்தகைய அளவையியல் தத்துவமே பயன்படுத்தப்படுகிறது.
மருந்துகளிலும் வாத மருந்து, பித்த மருந்து, ஐய மருந்து என்ற பிரிவுகள் உள்ளன. இக்கருத்து இன்றைய அறிவியலோடு ஒத்ததே. சித்த மருத்துவம் சிறந்த தருக்க நெறியில் அமைந்த அறிவியல் என்பதை அறிவியலாரும் ஒப்புக் கொள்கின்றனர்.
“நஞ்சை அமுதாக்கும் வித்தையை நம் சித்தர்களிடம் காண்கிறோம். நவபாடாணங்களில் ஒன்றான நாபி ஒரு பொல்லாத நஞ்சு.
அதனைக் கோமூத்திரத்தில் இடுவதன் முன்னரும், இட்ட பின்னரும் வேதியல் நிலையில் சோதித்துப் பார்த்தனர். 24 மணி நேரம் கோநீரால் சுத்தியடைந்த நாபி இதயத்தை ஊக்குவிக்கிறது. அதற்கு முன், இதயத்துடிப்பை, குருதி அழுத்தத்தைக் குறைத்து உயிரைக் கொன்று விடுகிறது.
மாஸ்கர் , காய்ஸ் எனபவர்கள், 1937இல் செய்த சோதனையில், நாபியில் அடங்கிய அக்கோனிடின் கோநீரால் தீமை குறைந்த அக்கோனிடினாக மாறுகிறது என்று கண்டு பிடித்தனர்.
வேதியல் மாற்றம் கோநீரால் ஏற்படுவதை அறியும் போது, சித்தர்களின் சுத்திமுறை விஞ்ஞான முறையில் அமைந்த ஒன்றே என்று அறிந்து மகிழலாம். பழமையான சித்தர் அறிவியல் இக்கால அறிவியலோடு ஒத்திருக்கிறது என்பது புலப்படுவதுடன், சித்த மருத்துவமும் அறிவியல் மருத்துவமே என்பதும் விளக்கும்.
வெங்காரம் , நவச்சாரம் இரண்டும் முறையே நாத பிந்தாக இணையும். அவற்றின் கூட்டுச் சரக்கு ஆற்றல் மிக்கது. வீரத்தோடு வெண்ணெய் சேர்ந்தால் மருந்து வேலை செய்யாது. ஆனால் மிருதார்சிங் பாதிக்கப்படுவதில்லை.
மிளகும் சுக்கும் மித்ரு என்பர். சுண்ணம் தயாரிக்கும் போது சத்ருவால் அழித்து மித்ருவால் எழுப்புவர். ஆங்கில முறையிலும் மருந்தின் கலப்பில் ஒவ்வாமை பற்றி அறிந்திருக்க வேண்டும்.
தீயகம் அடங்கிய பொருளோடு தீயகம் ஏற்கும் பொருளைக் கலந்துவிடின் வெடித்து விடலாம். சிலபோது ஒன்றோடு ஒன்று கலந்து நச்சுப் பொருள் தோன்றலாம். இது வேதிநிலையில் ஒவ்வாமை. சாராயத்தில் கலந்து செய்த மருந்தில் தண்ணீர் ஊற்றினால் நீரில் கரையாமல் வண்டலாகப் படியும். மேலும் மணம் குணம் முதலியவற்றாலும் பொருந்தாது போகலாம்.
அது பௌதீக நிலையில் ஒவ்வாமை. மலமிளக்கியுடன் மலத்தைக் கட்டும் பொருளைச் சேர்த்தால், மருந்தியல் விளைவில் ஒவ்வாமை தோன்றும். சிலபோது ஒவ்வாமையும் தேவைப்படலாம். ஒன்றின் செயல்திறனைக் குறைப்பதற்கோ மாற்றுவதற்கோ அவை உதவும்.
இது போன்ற கருத்து சித்தர்களிடம் மிகுதியாக உண்டு.
ஒப்புறை – ஒத்த குண மருந்து
என்னும் வகையில் வேறுபடுத்தி விளக்குதல் சித்தர் முறை.

எதிருறை – எதிர் குண மருந்து
கலப்புறை – இருவித மருந்து
என்னும் வகையில் வேறுபடுத்தி விளக்குதல் சித்தர் முறை.
மனிதருக்கு உண்டாகும் நோய்கள் யாவுமே வாதம், பித்தம், ஐயம் என்ற இம்மூன்றில் அடங்கும். இம்மூன்றும் நோயின் மூன்று முகங்கள். இம்மூன்றினுள்,
வாத நோய்கள் எண்பது வகைப்படும். பித்தம்
வாத நோய்கள் எண்பது வகைப்படும். பித்தம்
நாற்பது வகைப்படும், ஐயம் என்னும் கபம் இருபது வகைப்படும்.
வாத பித்த ஐய மெனும் இம்மூன்றும் ஒன்றுக்கொன்று கலந்தும், உழன்றும் வேறுவிதமான தொழில்களைச் செய்து பல்வேறு நோய்களைத் தோற்றுவிக்கின்றன.

No comments:
Post a Comment