அன்புடையீர்,
அனைவருக்கும் இனிய வணக்கம். நமது உடலில் இயல்பாக வரும் நோய்கள் பற்றி அறிந்துகொள்வோம்.
அனைவருக்கும் இனிய வணக்கம். நமது உடலில் இயல்பாக வரும் நோய்கள் பற்றி அறிந்துகொள்வோம்.
உடலின் இயல்பு தரும் நோய்கள் :
கரு உருவாகும் போதே உடலின் இயல்புகளும் உடலோடு இணைந்தே உருவாகின்றன. உடலில் உயிர் இருக்கும் வரை, உடல்
இயல்புகள் இருக்கும். உடலை நன்னிலைப் படுத்த உடலியல்புகள் கருவிகளாக
அமைகின்றன. அவ்வாறான உடலியல்புகளை மருத்துவ நூலார் வேகம் என்னும்
குறியீட்டினால் குறிப்பிடுவர்.
அவை
அபான வாயு, தும்மல், சிறுநீர், மலம், கொட்டாவி, பசி, தாகம், இருமல்,
இளைப்பு, தூக்கம், வாந்தி, கண்ணீர், விந்து, மூச்சு, என்னும் பதினான்கு ஆகும்.
மேற்கண்ட இவை, தடுக்கப்பட்டாலும், தடைப்பட்டாலும் அவற்றின் எதிர்விளைவுகளாக நோய்களை உண்டாக்கும் என்று கணிக்கப்படுகிறது.
1. அபானவாயு:
இது கீழ்வாய்வளி அல்லது கீழ் நோக்குங்கால் அல்லது கீழ்க்கால் எனப்படும். இது தடுக்கப்பட்டால் அல்லது தடைப்பட்டால், மார்பு நோய், வாயு, குன்மம், குடல்வாதம், உடல் குத்தல், குடைச்சல், வல்லை, மலத்தடை, பசி, மந்தம் ஆகியவை உண்டாகும். ஈரல், மார்பு இவற்றிலுள்ள ஈரம் வற்றும்; வயிற்றில் எரிச்சல் உண்டாகும்; உளைச்சல், தலை கனத்தல், நோதல், மயக்கம், புளிப்பு, வாந்தி, குடல்வலி ஏற்படும்; உணவு உண்ணாமை, செறியாமை போன்றவை
தோன்றும்.
2. தும்மல்:
இது தடுக்கப் பட்டால் தலைவலி, முகம், இழுப்பு, இடுப்பு வலி, அரைமேல் வலி, வயிற்றுப் பொறுமல், விந்து நீத்தல், கால் கை கடுகடுத்தல், சிறுநீர்க் கடுப்பு முதலியன உருவாகும்.
3. சிறுநீர்:
நீரடைப்பு, நீர்வரும்வழியில் புண், ஆண்குறி சோர்வு, குறியில் சீழ் குருதி சேர்தல், குறியில் எரிச்சல் தோன்றும்.
4. மலம் :
சலதோசம், முழங்காலின் கீழ், பல நோய், தலைவலி, உடல்வலிமை குறைவு போன்றவை ஏற்படும்.
5. கொட்டாவி:
இதனால் முகம் வதங்கும், இளைப்பு, செறியாமை, நீர் நோய், வெள்ளைநோய், அறிவு மயக்கம், வயிற்று நோய் உண்டாகும்.
6. பசி
7. தாகம் அடக்கினால், உடலும் உடற்கருவிகளும் இயங்கா; சூலை, பிரமை, இளைப்பு, வாட்டம், சந்துநோவு ஆகியவை தோன்றும்.
8. இருமல்
9. இளைப்பு
(ஆயாசம்)கொடிய இருமல், மூச்சில் துர்மணம், நீர்மேகம், குன்மம், இதய நோய் உருவாகும்.
10. தூக்கம்
தலைக்கனம், கண் சிவத்தல், செவிடு, அரைப்பேச்சு போன்றவை வரும்.
11. வாந்தி
நமச்சல், பாண்டு, கண்நோய், பித்தம், இரைப்பு, காய்ச்சல், இருமல், தடுப்புக் குட்டம் ஆகியவை தோன்றும்.
12. கண்நீர்
தமரக வாயு, பீனிசங்கள், கண்நோய், தலையில் புண், குன்மம் வரும்.
13. விந்து
சுரம், நீர்க்கட்டு, கை கால்கள் கீல் நோய், விந்து கசிவு, மாரடைப்பு, மார்பு துடிப்பு, வெள்ளை போன்றவை வரும்.
14. மூச்சுதடைப்பட்டால்
இருமல், வயிற்றுப் பொறுமல், சுவையின்மை, குலைநோய், காய்ச்சல், வெட்டை ஆகியவை ஏற்படும் என்றுரைக்கப்படுகிறது.
இவற்றினால் நோய் என்பது இயல்புக்கு மாறானது என்பதும், மருத்துவம் என்பது இயல்புக்கு மாறான செயலை மீண்டும் இயல்பு நிலைக்கே மீளச் செய்வது என்பதும் அறிந்துகொள்ள முடிகிறது.
No comments:
Post a Comment