Saturday, 25 July 2015

நமது உடலை இயக்கும் தாதுக்கள்..

அன்புடையீர்,
 அனைவருக்கும் இனிய வணக்கம். இந்தப்பதிவில் தாதுக்கள் பற்றி அறிந்துகொள்வோம்.
 
உயிர்த் தாதுகள்
நாடிகள்வாயுக்கள் போலத் தாதுக்கள் உடலை இயக்கும் ஆற்றல்களாக அமைந்துள்ளன. 
 
இந்த தாதுக்கள் உடலில் குறைந்தால் உடலின் இயக்கத்தில் குற்றம் நேரும் என்பதால் இவை உயிர்த்தாதுக்கள் எனப்படுகிறது.
 
      அவைஇரசம்இரத்தம்தசைகொழுப்புஎன்புமச்சைவிந்து என்பன வாகும். இவை ஒவ்வொன்றும் வெவ்வேறு வகையாக உடலில் இயங்குகின்றன.
 
1. இரசம் – உடலுக்கும் உள்ளத்துக்கும் நிறைவு தரும்.
 
2. இரத்தம் – உயிரைக் காக்கும்.
 
3. தசை – உடலைத் தாங்கும்அசைவுபலந்தரும்.
 
4. கொழுப்பு – 
          உடலிலுள்ள தசைச் சந்துகளையும் என்புச் சந்துகளையும் தூர்த்து நிரப்பும். நெய்ப்பசையூட்டும்.
 
5. என்பு – உடலை உயர்த்தி நிறுத்தித் தாங்கும்.
 
6. மச்சை – என்புத் துளைகளில் நிரம்பும்.
 
7. விந்து – இனப் பெருக்கத்தை ஏற்படுத்தும்.
 
என்று ஏழு தாதுக்களும் அவற்றின் இயக்கமும் விளக்கப்பட்டுள்ளது. 
 
         இவற்றினால் தாதுக்கள் உடலுக்கு எந்த அளவுக்குச் சிறந்ததாகக் கருதப்படுகின்றன என்பது விளங்கும்.

No comments:

Post a Comment