Saturday, 25 July 2015

பத்திய விலக்கு

அன்புடையீர்,
        அனைவருக்கும் இனிய வணக்கம்.
 
பத்திய விலக்கு
      சலுகை முறையில் அளிக்கப்படுகின்ற விதிவிலக்கைப் போல, பத்தியத்துக்கும் விலக்கு அளிக்கக் கூடிய முறை கூறப்படுகிறது.
 
        " இல்லையேல் முப்பதின்மேல் பத்தியங்கள்
இடம்வேணும் பொருள்வேணும் ஏவல்வேணும்
வல்லையே முப்பதுக்குள் வந்த தானால்
வலுக்குமே பத்தியங்கள் வேணும் வேணும்.''
 
      பொது விதியாக முப்பது வயதுக்கு மேல் பத்தியம் வேண்டாம் என்று குறிப்பிடப்பட்டாலும், இடம், பொருள், ஏவல் என்னும் மூன்றையும் கருத்தில் கொண்டு, அவர்களுக்கும் பத்தியத்தை முடிவு செய்க என்று, மருத்துவர்க்குக் கூறப்பட்டுள்ளது.
 
 
        இடம் என்பது, நோயாளி வாழுகின்ற இடத்தையும், நோயாளி யின் உடல் வகையும், பொருள் என்பது நோய், நோயினால் நோயாளிக்கு ஏற்பட்ட பாதிப்பையும், ஏவல் என்பது மருந்தையும், மருந்து தரப்பட வேண்டிய காலத்தையும் கருத்தில் கொண்டு பத்தியம் தேவை. தேவையில்லை என்பதை முடிவு செய்ய வேண்டிய முடிவு, மருத்துவரிடம் விடப்படுகிறது.
 
         சித்த மருத்துவத்தில் உடலைக் காக்கவும், உடற்பிணியைப் போக்கவும் மேற்கொள்ளப்படுகின்ற நடவடிக்கை அறிவார்ந்த ஒழுங்குமுறை போல, வகுக்கப்பெற்றது.

No comments:

Post a Comment