Saturday, 25 July 2015

அகத்தியர் குழம்பு 118 நோய்களை தீர்க்கும்.

அன்புடையீர்,
       அனைவருக்கும் இனிய வணக்கம்.
அகத்தியர் குழம்பு
            சித்த மருத்துவ மருந்துகளில் மிகவும் புகழ்பெற்ற அரிய மருந்து களில் அகத்தியர் குழம்பும் ஒன்றாகும். 
 
         நோயாளிக்கு இம்மருந்தைத் தரும்போது, அனுபான முறைகளை அதாவது  மருந்துடன் சேர்க்கும் துணைப்பொருட்களை  மாற்றித் தருவதாலேயே பல நோய்களைத் தீர்க்கும் வல்லமை இம்மருந்துக்கு உண்டு எனக் கூறப்படுகிறது.
 
        இம்மருந்து, அகஸ்தியர் குழம்பு, அகத்தியர் குழம்பு, அருவு குழம்பு என்னும் பெயர்களால் வழங்கப்படுகிறது. 
 
            இதன் செய்முறை களை, அகத்தியர் குழம்பு, சித்த மருத்துவத்திரட்டு, வைத்திய சார சங்கிரகம், அனுபோக வைத்திய பிரம்ம இரகசியம், சகஸ்ர சித்த யோகம், தன் வந்திரி வைத்திய காவியம், யூகி முனிவர் கும்மி, அகத்தியர் அமுத கலைஞானம், தேரையர் சேகரப்பா, வைத்தியத் திருப்புகழ், நோய்களுக்கான சித்த பரிகாரம் ஆகிய நூல்களில் கூறப்பட்டுள்ளன.
 
 
           செய்முறைகளில் சிற்சில வேறுபாடுகளைக் கொண்டிருந்தாலும் மருந்தும் அதன் பயன்பாடுகளும் ஒன்றாகக் காணப்படுகின்றன.
 
 
        அகத்தியர் குழம்புக்கு 54 அனுபானங்களால் அதாவது சேர்க்கும் துணைப்பொருட்களால் சுமார் 118 நோய்களைக் குணமாக்கும் எனத் தெரிகிறது.
 
           ஒரே மருந்து இத்தனை நோய்களைத் தீர்க்கிறது என்பது சித்த மருத்துவ முறைக்கு அரியதல்ல. இம்மருந்தை விடவும் அதிக எண்ணிக்கையில் நோய்களைக் குணப்படுத்துகின்ற மருந்துகள் பல காணப்படுகின்றன. ஆனால், அகத்தியர் குழம்பு ஒன்றே, நோய்க்குத் தக்க அனுபானங்களைக் கொண்டு குணப்படுத்தக் கூடியதாக இருக்கிறது என்பது குறிப்பிடதக்கது. (அகத்தியர் குழம்பு இணைப்பு 8).

No comments:

Post a Comment