Saturday, 25 July 2015

மருத்துவ இயல்புகள்

அன்புடையீர்,
                 அனைவருக்கும் இனிய வணக்கம். மூலிகைத்தாவரங்களின் பயன்பாடு சித்த மருத்துவத்தின் ஒரு பகுதியே....இருந்தாலும் சித்த மருத்துவத்தில் மிக முக்கிய பங்கு வகிப்பது மருத்துவத் தாவரங்களே...அதனால் மருத்துவத்தாவரங்களை அறிந்து அவற்றின் மருத்துவப்பயன்களை அறிவோம்..

மருத்துவ இயல்புகள்
மருத்துவ இயல்புகள் என்பதுமுன்னோர் மேற்கொண்ட முறைகளின் வழியே பின்னோரும் பின்பற்றிஅம்முறை தவறாமல் மருத்துவம் செய்வதைக் குறிக்கும். இவைமுறைப்படி வகுக்கப் பெற்ற வழிமுறைகள் என்று கூறலாம். வழிமுறை தவறிய மருத்துவச் செயல்களினால்மருத்துவத்தின் பயனும் தவறக் கூடும் என்பதனால் வழி முறை வகுத்துள்ளனர்.
இயல்புகள்16
1. வியாதி அறிதல், 2. அதன் காரண மறிதல், 3. அது நீங்கும் வழி தேர்தல், 4. பிணிக் காலங்களின் அளவை உணர்தல், 5. நோயாளி அளவு அறிதல், 6. உடலின் தன்மை அறிதல், 7. பருவம் நாடல், 8. வேதனைகளின் அளவு அ றிதல், 9. சாத்தியம் ஆய்தல், 10. அசாத்தியம் ஓர்தல், 11. யாப்பியம் உணர்தல், 12. மருந்து செய்தல், 13. பழைய மருத்துவர் முறையில் தவறாமை, 14. உதிரங்களைதல், 15. அறுத்தல், 16. சுடுதல் என்பன மருத்துவ இயல்புகளாகும்.
நோயாளிக்கு வந்துற்ற நோய் எது எனத் தேர்வு முறையால் அறிந்துஅந்த நோய் வருவதற்குரிய காரணங்களைக் கண்டறிய வேண்டும். வந்துள்ள நோய் நீங்க வேண்டுமானால்மருத்துவத்தில் எந்த முறையைப் பயன்படுத்தினால் நீங்கும் என ஆராய்ந்து தேரவேண்டும். நோய் எத்தனை நாளாக இருக்கிறது என்பதைக் கேட்டுநோயாளியின் உடலின் தன்மையை அறிந்துவந்துற்ற நோய் நோயாளியால் தாங்கக் கூடியதா?ஏற்ற மருந்தைக் கொடுத்தால் உடல் தாங்குமாஎன்பதை அறிந்துநோய் வந்த காலத்தை அறிந்துநோயாளி படுகின்ற துன்பத்தின் அளவைக் கொண்டுநோய் நீங்கும்– நீங்கா தென்று கணித்து மருந்து செய்ய வேண்டும். மருத்துவம் பார்க்கும் போதுமுன்னோர் மேற்கொண்ட முறையின்படி மருத்துவ விதி மேற்கொள்ளப்பட்டது.
மேலே கூறப்பட்ட பதினாறு முறைகளையும் முற்றக்கற்று அதன் வழி மருத்துவம் செய்யத் தக்கவனே முறையான மருத்துவனாகக் கருதத்தக்கவன் என அறியலாம். இவற்றில் காணப்படும் அறுத்தல்சுடுதல்உதிரங்களைதல் என்னும் முறைகள் அறுவை மருத்துவ முறைகளாக இருக்கின்றன. மருந்து முறைகளோடு அறுவை முறைகளும் சேர்ந்து அமைந்தது சித்த மருத்துவ முறை என்பது தெரியவரும்.

No comments:

Post a Comment