அன்புடையீர்,
அனைவருக்கும் இனிய வணக்கம்.பத்தியக்குற்றமும் அதனால் ஏற்படும் விளைவுகளும் பற்றி காண்போம்.
அனைவருக்கும் இனிய வணக்கம்.பத்தியக்குற்றமும் அதனால் ஏற்படும் விளைவுகளும் பற்றி காண்போம்.
பத்தியக் குற்றம்
பத்தியத்தில்
எவ்விதமான தவறும் நிகழ்ந்து விடக்கூடாது என்பதே மருத்துவ நெறியாகக்
கூறப்பட்டு வருகிறது. பத்தியத்தில் தவறு நேர்ந்து விட்டால் என்ன ஆகும்.
“பத்தியத்தின் குற்றத்தினால் மருந்தின் பயன் கெடுவது மட்டு மல்லாமல், உடம்பிலுள்ள தாதுக்களில் எலும்பு வரை நோயின் கடுமை தீவிரமாகி நோயாளியை வருத்தும்.”
என்பதால், பத்தியத்தில் குற்றம் நிகழக் கூடாது என்பது குறிப்பிடத் தக்கது.
பத்தியக்குற்ற விளைவு
எந்தச் செயலுக்குமே பயன் என ஒன்றிருந்தால், எதிர் விளைவு என ஒன்று இருந்தே ஆகவேண்டும். எதிர்வினை ஆற்றல் என்பதே செயலுக்குரிய ஆற்றலாகக் கூறுவர். அதைப் போல, பத்தியத்தினால் உண்டாகக் கூடிய பயன் என ஒன்று இருக்கும் போது, எதிர்விளைவு என்ன என்பதையும் அறிந்தால் பத்தியத்தின் தேவை புலப்படும்.
நோய்க் காலங்களில் மட்டுமல்லாமல், நோயைத் தடுக்கும் கற்ப முறை மருந்துகளை உண்ணுகின்ற காலத்திலும், புளிக்கறி உண்டால் பெருவயிறு உண்டாகும். கிழங்கு வகை உண்டால் சோகை முற்றி பாண்டு நோயை உருவாக்கும். மீன் மயக்கம், கெடுதி, சுரம் போன்ற நோய்களை வருவிக்கும். மோர், குன்ம
நோயைத் தரும்.
பச்சை உப்பை உணவில் சேர்த்துக் கொண்டால் கண் இரண்டும்
பாதிக்கும் என்று பத்தியப் பொருள்களினால் வரக்கூடிய விளைவுகள்
உரைக்கப்பட்டன.
ஒரு நோய்க்காக மருந்தை உண்ணும் போது, அந்நோய் தீராமல், வேரொரு நோயை வருவித்துக் கொள்வது அறிவுடைமையாக அமையாது என்பதால், மருத்துவக் காலங்களில் மருத்துவர் கூறும் பத்திய முறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை அறிந்துகொள்ளவேண்டும்..
பத்தியப் பொருள் பொதுவிதி
பத்தியப் பொருள் என்பது விலக்க வேண்டிய பொருள், விலக்க வேண்டாப் பொருள் என்னும் இரண்டையும் குறிக்கும். இங்கு, விலக்க வேண்டிய பொருளைக் குறிக்கவே பத்தியம் என்னும் சொல் பயன் படுத்தப்படுகிறது.
பொதுவாகப் பத்தியப் பொருள்களில் முதலிடம் வகிக்கக் கூடிய பொருளாக அமைபவை, புளி, புகை ஆகிய இரண்டுமாகும்.
புளி, புகை
ஆகிய இரண்டும் மருந்துக்கு எதிர்வினை ஆற்றலைத் தூண்டக் கூடிய பொருளாகக்
கண்டறியப் பட்டிருப்பது தெரிகிறது.
இவை மட்டும் பத்தியப் பொருள்களல்ல. பொதுவான பத்தியப் பொருள்களாகக் கூறப்படுகின்றவை, உப்பு, புளி, கடுகு, எள், இறைச்சி, மீன், பூசணிக்காய், பெண்போகம், வரகு, கொள்ளு, புகையிலை என்பன முக்கியமானவை.
No comments:
Post a Comment