ஶ்ரீதன்வந்திரி ஸ்லோகம்.
ஓம் நமோ பகவதே வாசுதேவாய
தன்வந்த்ரயே அமிர்த கலச ஹஸ்தாய
சர்வ ஆமய விநாசநாய த்ரைலோக்ய நாதாய
ஸ்ரீ மஹா விஷ்ணவே நமஹ
அன்புடையீர்,
அனைவருக்கும் இனிய வணக்கம். நடத்துநர் ஒசட்டி ஜடேசாமி உங்களுக்காக பதிவிடுவது ...இந்தப்பதிவில் பஞ்சபூதம் என்றால் என்ன? என்பது பற்றி காண்போம்.
பஞ்சபூதம்
பஞ்சபூதம் என்பது, நிலம், நீர்,நெருப்பு,காற்று, ஆகாயம் என்னும் ஐந்தாகும். இவற்றில் ஏதேனும் ஒன்று இல்லா விட்டாலோ, குறைந்தாலோ உயிர்கள் தோன்றவும் வழியில்லை.அதுபோல வாழவும் வழியில்லை.
உயிர்கள் தோன்றவும் உய்யவும் காரணமாக அமைவது பஞ்ச பூதமாகும்.
''நிலம், தீ, நீர், வளி, விசும் பொடு ஐந்தும்
கலந்த மயக்கம் உலகம் ஆதலின்''
என பஞ்சபூதங்களின் கலவையால் உருவானதே இந்த உலகம் என்று, தொல்காப்பியம் உரைக்கிறது.
உலகமும் பஞ்சபூதமும்
உலகம் பஞ்சபூதங்களின் கலவையினால் உருவாகியிருப்பதைப் போல, நிலவுலகில் உருவாகி யிருக்கும் பொருள்களும் பஞ்சபூதங் களின் கலவையால் அல்லது சேர்க்கையால் உருவானவை.பஞ்ச பூதங்களின் தொகுதியே உயிரினங்களை உருவாக்கின என்பதால், உயிர்த் தோற்றத்திற்குப் பஞ்சபூதங்களே ஆதியாக அமைவது தெரிய வருகிறது.
“ வாறான சனங்களுக்கும் ஐந்து பூதம்
மருவியதோர் தேவதைக்கும் ஐந்து பூதம்
தாறான அண்டமெலாம் ஐந்து பூதம்
சதாசிவமாய் நின்றதுவும் ஐந்து பூதம்
கூறான யோனியெல்லாம் ஐந்து பூதம்
குரும்பனே ஐந்தினால் எல்லாம் ஆச்சு''
என்று, சட்டைமுனி உரைக்கின்றார்.
ஐம்பூதங்களால் உருவானவை மனிதர் மட்டுமல்ல, தேவதைக்கும்
அவைதாம். சதாசிவமாய் நின்ற தெய்வத்துக்கும் அவைதாம். உயிரினங்கள்
அனைத்துக்கும் அவைதாம். அவற்றால்தான் அனைத்துமே உருவாயிற்று என்று
தெளிவுபடுத்துவர்.
உயிரினங்கள் பஞ்சபூதங்கள் அல்லாமல் வேறு முறையில் உருவானவை அல்ல என்பதே இதன் அடிப்படைக் கருத்து.
ஒரு பொருளின் மூலத்தைக் கண்டுரைப்பதைப் போல, உயிரினங்கள் அனைத்திற்கும் மூலமாய் நிற்பது பஞ்சபூதங்கள் என எண்ணினர்.
பஞ்ச பூதங்களால் பிறப்பு
பஞ்சபூதங்கள் எங்கு உள, எங்கு இல என்றில்லாமல், எல்லா இடங்களிலும் எல்லா நிலைகளிலும் நிறைந்திருக்கின்றன. எந்த இடத்தில் பூதங்கள் அனைத்தும் இல்லையோ, அந்த இடத்தில் உயிரினங்களும் அவற்றின் பிறப்பும் இல்லை என்ற கருத்து உறுதிப் படுவதற்கு, ஒளவைக் குறள் கூறும் கருத்து சான்றாகும் பூதங்கள் எல்லாம் ஒரே அளவில் இருந்தால், அங்கும் பிறப்பில்லை.அவை, பங்கு பெரும் அளவு மாறினால் உயிர் உண்டாகும் என்பது ஒளவையின் கருத்தாகும்.
பூமி போன்ற கோள்களும், விண்மீன், சூரியன் போன்ற ஒளியன் களும், சுழன்று கொண்டிருக்கும் அண்ட கோளம் என்னும் வான்வெளி ஆகிய எங்கும் நிறைந்திருப்பது பஞ்ச பூதங்கள் என்பதே அடிப்படைக் கருத்தாகக் கூறக் காணலாம்.
பஞ்சபூதமும் உடம்பும்
உடம்பை
ஆட்சி செய்வது பஞ்ச பூதமாகும். பஞ்சபூதம் அளவில் ஒன்று மாறினாலும்
உயிருக்குக் கேடு வந்து நேரும் என்பது சித்த மருத்துவக் கோட்பாடு
அண்டத்தில் இயங்குகின்ற ஆற்றல்கள் அனைத்திற்கும் இதே நிலைமைதான் என்றும் பொதுவிதி கூறப்படுகிறது. அண்டத்துக்கு வேறு, பிண்டத்துக்கு
வேறு என்னும் பாகுபாடு இயற்கை நியதியில் இல்லை என்பதை உணர்த்துவது சித்த
மருத்துவக் கோட்பாட்டின் அடிப்படைக் கருத்து என்பதை,
"" அண்டத்தி லுள்ளதே பிண்டம்
பிண்டத்தி லுள்ளதே அண்டம்
அண்டமும் பிண்டமும் ஒன்றே
அறிந்துதான் பார்க்கும் போதே''
சட்டமுனிஞானம் உரைக்கக் காணலாம்.
பஞ்சபூதமும் உடல் உறுப்பும்
பஞ்சபூதம் உடலை உருவாக்குகிறது என்பது பொதுவாகக் கூறப்படும். பஞ்சபூதங்கள் உடம்பின் உறுப்புகளாக அமைந்துள்ளன என்பதை விளக்குவது, சித்த
மருத்துவக் கோட்பாட்டியலின் உடலியல் கொள்கை.
மருத்துவ நூலார் உடல்
உறுப்புகளை நுண்ணிதின் உணர்ந்ததன் பயனாலேயே இவ்வாறான கொள்கையும், கோட்பாடும் உருவாகியிருக்கின்றன.
உடல் உறுப்புகளில் பஞ்சபூதங்களின் கூறுகள் வருமாறு:
மண் : எலும்பு, தோல், இறைச்சி, நரம்பு, மயிர்.
நீர் : உதிரம், மஞ்சை, உமிழ் நீர், நிணம், விந்து.
தீ : பயம், கோபம், அகங்காரம், சோம்பல், உறக்கம்.
காற்று : போதல், வருதல், நோய்ப்படுதல், ஒடுங்குதல், தொடுதல்.
ஆகாயம்: ஆசை, உட்பகை, மோகம், மதம், வஞ்சனை.
என்னும் இருபத்தைந்தும் பஞ்சபூதத்தின் கூறுகளால் உடம்பில் அமைந்திருக்கின்றன என்பர். இதனோடு ஒத்த கருத்தைச் சங்ககால இசை நூலான பஞ்சமரபு உரைக்கின்றது.
உடம்பின் அகக் கூறுகள்
பஞ்ச பூதங்களால் உடம்பில் அமையப் பெற்ற இருபத்தைந்தை, உடம்பின் அகக் கூறுகள் என்று குறிப்பிடப்படும். இவையல்லாமல் மேலும் பல அகக் கூறுகள் உடம்பிலுள்ளதாகத் திருமந்திரம் உரைக்கிறது.
உடம்பில் அமைந்த அகக் கூறுகள் இருபத்தைந்து 4,00,48,500 அகக்கூறுகள் என்று விரித்து உரைக்கப்படும். அவை அனைத்தும் 96 என்று கூறப்படும் (96உடல் தத்துவம்) அகக் கூறுகளில் அடங்கும். அந்த 96 ஐயும் அடக்கிக் கூறினால் இருபத்தைந்தாகும் என்று, அகக் கூறுகள் தொகுத்தும் விரித்தும், சுருக்கியும் ஆராயப்பட்டிருக்கின்றன.
உடம்பில் அமைந்த பஞ்சபூதங்களின் கூறுகளைக் கருத்தில் கொண்டு சைவம், வைணவம், வேதாந்தம், சித்தாந்தம், ஆகிய கொள்கையினை உடையோர் கோட்பாட்டினை வகுத்துக் கொண்டனர்.
பொதுவாக, பஞ்சபூத மெய்க் கூறுகள் என 96ஐக் குறிப்பிடலாம். அந்தத் தொண்ணூற்றாறு கூறுகளையே தத்துவம் என்பர். அந்தத் தத்துவங்களில் சைவ சமயம் முப்பத்தாறு தத்துவங்களையும், வேதாந்திகள் முப்பத்திரண்டு தத்துவங்களையும், வைணவ சமயம் இருபத்து நான்கு தத்துவங்களையும், மாயாவாதிகள்
எனக்கூறப்படுகின்ற சித்தாந்திகளான மருத்துவ நூலார் இருபத்தைந்து தத்துவங்களையும் தங்கள் கொள்கைகளாகக் கொண்டிருக்கின்றனர் என்பர்.
நோய்கள் எல்லாம் நீக்கும் தன்வந்திரி பகவானின் மூல மந்திரம்:
ஓம் நமோ பகவதே வாஸுதேவாய! தன்வந்தரயே! அம்ருத கலச ஹஸ்தாய !
ஸர்வ ஆமய விநாசநாய த்ரைலோக்ய நாதாய் ஸ்ரீமகாவிஷ்ணவே நம !
பொருள்:
அமிர்த கலசத்தை கையில் ஏந்திய வாசுதேவனே,
தன்வந்திரி பகவானே, எல்லா நோய்களையும்
தீர்ப்பவரே, மூன்று உலகங்களுக்கும் அதிபதியான
ஸ்ரீ மஹாவிஷ்ணுவாகிய உங்களுக்கு நமஸ்காரம்.
Copy and WIN : http://ow.ly/KNICZ
Copy and WIN : http://ow.ly/KNICZ
நோய்கள் எல்லாம் நீக்கும் தன்வந்திரி பகவானின் மூல மந்திரம்:
ஓம் நமோ பகவதே வாஸுதேவாய! தன்வந்தரயே! அம்ருத கலச ஹஸ்தாய !
ஸர்வ ஆமய விநாசநாய த்ரைலோக்ய நாதாய் ஸ்ரீமகாவிஷ்ணவே நம !
பொருள்:
அமிர்த கலசத்தை கையில் ஏந்திய வாசுதேவனே,
தன்வந்திரி பகவானே, எல்லா நோய்களையும்
தீர்ப்பவரே, மூன்று உலகங்களுக்கும் அதிபதியான
ஸ்ரீ மஹாவிஷ்ணுவாகிய உங்களுக்கு நமஸ்காரம்.
Copy and WIN : http://ow.ly/KNICZ
Copy and WIN : http://ow.ly/KNICZ
No comments:
Post a Comment