அன்புடையீர்,
அனைவருக்கும் இனிய வணக்கம்.
அனைவருக்கும் இனிய வணக்கம்.
புடம்
மருந்தியல்
சித்த மருந்தியல் அணுவை அடிப்படையாகக் கொண்டது. மருந்துப் பொருள்களில் உள்ள அணுவை நுண்ணணுவாகவும்’ பரமாணுவாகவும் மாற்றுவது, சித்த ‘மருந்தியல்’ ஆகும்.
ஒரு பொருளிலுள்ள அணுக்களை வேறொரு பொருளிலுள்ள அணுக்களுடன் இணைத்து, வேதியல் முறைப்படி புதிய அணுக்களை உருவாக்கி, அதன் மூலம் நோய்களைக் களைவது சித்த மருந்தியலின் அடிப்படை யாகும்.
இவ்வாறு, அணுவியல் மாற்றங்களை உருவாக்க, வெப்பம், தீ, நெருப்பு போன்ற உலைகளின் மூலம் அணுக்கள் தயாரிக்கப் படுகின்றன. மருந்துகள் தயாரிக்கப் பயன்படுகின்ற உலைகள், ‘புடம்’ என்னும் சொல்லால் குறிப்பிடப் படுகின்றது.
புடம்
மருந்துகள் தயாரிக்கும் போது, அரைத்து, வேகவைத்து, எரித்து, நுண்ணிய அணுக்களாகப் பிரிக்கப் புடமிடுவர்.
தீயின் அளவு
புடமிடும் போது, விறகின் மூலம் எரிக்கப்படும் தீ நான்கு வகைப் படும்.
அவை,
தீபாக்கினி :
விளக்கின் சுடரைப் போல எரிவது.
கமலாக்கினி :
தாமரைப் பூப்போல எரிவது.
கதலியாக்கினி:
வாழைப் பூப்போல எரிவது.
காடாக்கினி :
தீப்பந்தம் போல எரிவது.
புடத்தின் வகை
எரு, வறட்டி
இவற்றைக் கொண்டு எரிக்கப்படும் தீயின் அளவைக் குறிப்பிடுவது புடத்தின்
வகையாகும். வறட்டியின் எண்ணிக்கைக்குத் தக்கவாறு பெயர் குறிப்பிடப்படும்.
புடம் ஒன்றுக்கு ஒன்று முதல் ஆயிரம் வறட்டி வரை பயன்படுத்தப்படும்.
காடைபுடம் 1வறட்டி; கவுதாரி 3வறட்டி; சேவல் 10வறட்டி; பன்றி 50வறட்டி; கனம் 700வறட்டி;
கசம் 1000வறட்டி என்றும், வறட்டி எண்ணிக்கையைக் கொண்டு புடத்தின் வகை குறிப்பிடப்படும்.
மருந்துகள் ஒவ்வொன்றுக்கும் அவற்றின் சேர்க்கைக்கும், தயாரிப்புக்கும் ஏற்றவாறு புடங்களின்வகை இருக்கும். மருந்துகள் தயாரிக்கப் பயன்படும் புடங்களின் பட்டியல் வருமாறு;
வரிசை எண் புடம் பெயர் எரு அல்லது வறட்டி எண்ணிக்கை
1. காடைப் புடம் 1வறட்டி
2. கவுதாரிப் புடம் 3வறட்டி
3. குக்குடப் புடம் 10வறட்டி (அ) 8வறட்டி
4. வராக புடம் 50வறட்டி
5. கஜம் (அ) யானை புடம் 500வறட்டி (அ) 1000வறட்டி
6. கன புடம் 700வறட்டி (அ) 800வறட்டி
7. மணல் மறைவுப் புடம் 800வறட்டி
8. கோபுடம் 1000வறட்டி
என்னும்
செயற்கைப் புட வகையால் மருந்து தயாரிக்கப் பட்டன. தீயினால் உண்டாகும்
வெப்பத்தைக் கொண்டு மட்டுமே மருந்து தயாரிக்கப் படுவதில்லை.
இயற்கையாகக்
கிடைக்கக் கூடிய வெப்பத் தைக் கொண்டும் தயாரிக்கப்படும். அவ்வாறு
தயாரிக்கப் பயன்படும் புடங்கள் இயற்கைப் புடம் எனப்படும். அவற்றின் விபரம்
வருமாறு:
வரிசை எண் புடம் பெயர் பயன்படும் பொருள்
1. கோபுர புடம் மணல்
2. பாணிடப் புடம் தண்ணீர்
3. உமிப் புடம் உமி
4. தானியப் புடம் நெல்
5. சூரியப் புடம் வெயில்
6. சந்திரப் புடம் நிலவொளி
7. பருவப் புடம் பௌர்ணமி நிலவு
8. இருள் புடம் அமாவாசை இரவு
9. பனிப்புடம் பனி
10. பட்டைப் புடம் மரத்தூள்
11. நிழற்புடம் சூரிய ஒளி படாத அறை
எரி பொருள்கள்
தைலம், எண்ணெய், களிம்பு, குழம்பு போன்ற மருந்துகள் எரிப்பு முறையால் தயாரிக்கப்படுபவை. அவை, எரித்தெடுக்கப் பயன்படும் விறகுகள் பல வகையாகும். ஒரே வகையான விறகுகளால் தயாரிக்கப் படாமல், மருந்தின் குணத்திற்கு ஏற்ற விறகுகள் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன.
விறகின் வகையும் அவற்றால் தயாரிக்கப்படும் மருந்தின் விபரமும் வருமாறு:
வரிசை விறகின் பெயர் தயாரிக்கப்படும் மருந்தின் பயன்
எண்
1. ஆவாரை உடலில் ஏற்படும் வெப்பு முதலிய
2. சிற்றா முட்டி நோய்களுக்கான தைலம்
3. உசில் கண், காது, மூக்கு, பாதம் ஆகிய
4. இலந்தை இடங்களுக்கு இடும் நெய், தைலம்
5. இலுப்பை உடலில் பூசுவதற்காகப் பூசும்
6. புளி பிடித் தைலம்
7. வேம்பு வாத நோய்களுக்குப் பயன்படும்
8. பூவரசு குடிநீர், தைலம்
9. அரசு
10. நுணா
11. வன்னி வாத நோய் தைலம்
12. மாவிலிங்கம்
13. நெல்லி
14. வேம்பு பித்த நோய் தைலம்
15. விளா
16. உசில்
17. வேலன் ஐய நோய் தைலம்
18. கொன்றை
19. வேங்கை
20. பனை
21. தென்னை இரசம் சேர்ந்த மருந்து
22. வேம்பு
23. வேலன் இரும்பு சேர்ந்த மருந்து
24. வேங்கை
மேற்கண்ட பட்டியல்களைக் கொண்டு சித்த மருத்துவ மருந்துகள் தயாரிக்கப்பட்ட முறைகளை அறியலாம்.
No comments:
Post a Comment