Saturday, 25 July 2015

பித்த நோய்கள் 48

அன்புடையீர்,
   அனைவருக்கும் இனிய வணக்கம்.

பித்த நோய் வருவதற்கான காரணங்கள்....
          பித்த நோய்கள் 48 ஆகும். அவை, மனம், செயல், உணவு என்னும் வழிகளால் நோய் வரும் எனப்படுகிறது. அவை காதல், காமம், கோபம், பழி, மன உளைச்சல், வருத்தம், துயரச் செய்தி, மரணச் செய்தி, வஞ்சகம், பகை, பயம், என்னும் மனம் சார்ந்த உணர்ச்சிகளும், உறக்கமின்மை, பட்டினி, செய்வினை, நடை, அலைச்சல், கடற்பயணம், நீண்ட உறக்கம். மருந்தீடு, அபின், கஞ்சா, நீர், மலம் அடக்கல் என்னும் செயல்களும்,மிளகாய், பெருங்காயம், கஞ்சி, உப்பு, வெள்ளுள்ளி, காரம், வேப்பெண்ணெய், இலுப்பை எண்ணெய், ஏறண்ட எண்ணெய், தேங்காய் எண்ணெய், மிளகு, வற்றல், திப்பிலி, கடுக்காய், மஞ்சள், போன்றவை  பித்தத்தை உண்டாக்கும் பொருள்களாகக் கூறப்படுகின்றன. 
 
       பித்தம் உடலைக் காக்கும் செயலைச் செய்வது என்று கூறப்பட்டுள்ளது. மேற்கண்ட பொருள், செயல் ஆகியவை பித்தத்தை உருவாக்கக் கூடியவையாக இருப்பதனால், அதனால் உடலுக்கு நன்மைதானே என்றால் நன்மைதான், எந்த அளவு என்றால்,  
 
      வாதம் ஒன்று, பித்தம் அரை, கபம் என்னும் ஐயம் கால் என்னும் அளவில்தான் இருக்க வேண்டும். 
 
       அந்த அளவை மீறினால் தான் நோய் வரும் வழிகள் திறக்கப்படும் என்று அறியலாம்.

No comments:

Post a Comment