Saturday, 25 July 2015

மருந்து பொருள் விளக்கம்..

அன்புடையீர், 
    அனைவருக்கும் இனிய வணக்கம். 
 
சித்த மருத்துவத்தில் மருந்து...
    துன்பத்தை வேருடன் களைந்து பிணி, மூப்பு, சாக்காடு என்னும் இவற்றை ஒழித்து, உடலில் எக்காலமும் உயிர் நிலைத்திருக்கச் செய்யும் கருவியே மருந்து எனவும், அது பயன்படுத்தப்படும் முறையே மருத்துவம்  எனவும் கூறுவர். இதனால் மருத்துவத்தின் பயனும், சிறப்பும் விளங்கக் காணலாம்.

            சித்த மருத்துவத்தில் வாத மருந்து, பித்த மருந்து, ஐய மருந்து என்னும் பிரிவுகள் உள்ளன. இம்மருந்துகள் தேவ மருந்து, மனித மருந்து, இரச மருந்து என்னும் முப்பெரும் பிரிவுகளாகக் காணப் படுகின்றன.

மருந்துப் பொருள் விளக்கம்
   மருந்து என்னும் சொல்லுக்கு
1. ஒளடதம் (Medicine),  
2.பரிகாரம் (Remedy),  
3.அமிர்தம் (Ambrosia),  
4.வசியமருந்து (Pitter),  
5.சோறு (Cooked Rice),  
6.இனிமை (Sweetness), 
7. குடிநீர் (Drinking Water) 
ஆகிய பொருள்கள் உள்ளன.
       


No comments:

Post a Comment