Saturday, 25 July 2015

சித்த மருத்துவ ஒழுக்கம்.

அன்புடையீர்,
          அனைவருக்கும் இனிய வணக்கம். சித்த மருத்துவ ஒழுக்கம் பற்றி பார்ப்போம்.
         
             நோயையும் நோயாளனையும் கணித்தறியாமல் செய்யும் மருத்துவம்முறைப்படுத்தப்பட்ட மருத்துவமாகக் கருதப்பட மாட்டாது. 

                 நோயின் வன்மைமென்மைகளையும்நோயாளியின் உடல் மன உறுதிகளையும் ஆராய்ந்தே மருத்துவ முயற்சிக்கு மருத்துவன் முயல வேண்டும். 

           அதுவும் ஆரம்ப நிலையிலேயே கடுமையான மருந்துகளைத் தந்துவிடாமல்மெள்ள மெள்ளக் கடுமையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று செயல்முறை விதிகளில் அடுக்கு முறை கையாளப் படுகிறது.

      இதனால் மருத்துவத்தின் பக்குவமும் முதிர்ச்சியும் அறியப் படுகிறது.

“ உற்றான் அளவும் பிணியளவும் காலமும்
கற்றான் கருதிச் செயல்''
என்று குறள் கூறும் மருத்துவச் செயல் விதி இதனைச் சுருக்கமாகவும் தெளிவாகவும் உரைக்கிறது.

சித்த மருத்துவ ஒழுக்கம்
            ஒழுக்கம் என்பது தூய்மையான நடைமுறையைக் குறிக்கும். தூய்மையான நடைமுறைகள் உயிரினும் உயர்ந்ததாகக் கடைப் பிடிக்கப்பட்டு வந்திருப்பது தெரியவரும். இது வாழ்க்கை ஒழுக்கத்தைக் குறிப்பிடும். வாழ்க்கையோடு ஒன்றிய மருத்துவ ஒழுக்கமும் அவ்வாறே கடைப்பிடிக்கப்பட்டது.
மருத்துவம் செய்கின்ற மருத்துவன் சாதாரண மனித குணங்களி லிருந்து மாறுபட்டு உயர்ந்த குணமுடையவனாக இருக்க வேண்டும் என மருத்துவ நூலார் கருதுகின்றனர். அதனால்தான் ஒழுக்கமும் ஒழுக்க முறையையும் வகுத்துக் காட்டினர். அவ்வழிமுறைகளைப் பின் பற்றி மருத்துவம் செய்வதே ஒழுக்கமுடைய மருத்துவமாகக் கருத முடியும் என எண்ணினர்.

மருத்துவனின் பற்றற்ற நிலை
              மருத்துவன்பொருளின் மீது ஆசையோ பற்றோ கொண்டு அவற்றை நிறைவேற்றிக் கொள்வதற்காக மருத்துவத்தைப் பயன்படுத்தக் கூடியவனாக இல்லாமல்பொருளாசை கொள்ளாத வனாக இருக்க வேண்டும்.

மருத்துவனின் அன்புடைமை
           மருத்துவத்தின் மீதும்பிணியாளர் மீதும் ஆர்வமும் இரக்கமும் உடைய அன்புடையவனாக’ இருக்க வேண்டும்.

மருத்துவனின் கல்வி
           வன்மையானஒன்பது வகை உலோகங்கள்ஒன்பது வகைப் பாடாணங்கள்இருபத்தைந்து வகை உப்புகள்நூற்றிருபது வகை உபரசங்கள்முன்னூற்றுக்கும் மேற்பட்ட கற்பவகைகள்ஆயிரத்து எட்டுவகை மூலிகைகள் ஆகியஇவற்றின் வழிமுறைகளைக் கண்டறிந்தவனாக இருக்க வேண்டும்.
மேற்கண்ட மருந்துப் பொருள்களின் குற்றங்களைத் தீர்க்கும் வழிமுறைகள் அறிந்திருக்க வேண்டும்.

மருத்துவக் கல்வியின் முதிர்ச்சி
         மருந்துப் பொருள்களில் இயற்கையாக உள்ள மாசுகளான கசடுகளை நீக்கும் சுத்திமுறைகளை அறிந்துபல்வேறு வகையான செய்முறைகளால் – புடமுறைகளால் பக்குவப்படுத்தி மருந்துகளாக உருவாக்க வேண்டும். எந்தெந்த மருந்துகள் எந்தெந்த நோய்க்கு உரியதென்று அறிந்தறியும் ஆராய்ச்சி அறிவுடையவனாக இருந்துமருத்துவ நெறிகளுக்குக் கட்டுப்பட்டுஅதன் வழியில் மருத்துவம் செய்யும் மருத்துவனே மருத்துவ ஒழுக்கமுடைய மருந்துவனாகக் கருதப்படுபவன் ஆவான் என்பர்.

மருத்துவனுக்கு வேண்டிய ஈகைக்குணம்
         வாதமுறையில் மருத்துவம் செய்யும் மருத்துவர்கள்உலோக மாற்று முறைகளைப் பயன்படுத்திப் பொருள் தேட முயற்சிக்கக் கூடாது. அவ்வாறு செய்ய நேர்ந்தால்தேடிய பொருள்களை ஏழைஎளியோர்க்கும்வறுமையுற்றவர்களுக்கும்நோயாளிகளுக்கும்உதவ வேண்டும். அவர்களுக்குத் தானமாக ஆடைஉணவுபொருள் முதலிய வற்றால் உதவி புரிய வேண்டும் என்று குறிப்பிடுவதிலிருந்துமருத்துவ ஒழுக்கத்தினால் மருத்துவம் சிறந்தோங்குவதுடன் மருத்துவக்கலை தவறான முறையில் பயன்படுத்தப் படுவதைத் தவிர்க்கும் பொதுநல நோக்கமும் உள்ளடங்கியிருப்பது தெரியவரும்.

No comments:

Post a Comment