அன்புடையீர்,
அனைவருக்கும் இனிய வணக்கம்.
அனைவருக்கும் இனிய வணக்கம்.
நீராடலும் உடல் நலமும் .
நீராடுதல் என்பது தினமும் நீரில் குளிப்பதை உரைப்பதன்று. அது புறத்தே உள்ள அழுக்கை நீக்குவது. அதனால் தான் ‘புறந்தூய்மை நீரான் அமையும்’ என்றும் குறிப்பிடப்படுகிறது.
நீராடுதல் என்பது ‘சனிநீராடு’ எனக் குறிப்பிடும் நீராடலையாகும். நீராடுதல் வாரம் ஒன்றுக்கு இருமுறை நீராட வேண்டுமென்று, ‘வாரம் இரண்டு’ என்று குறிப்பிடக் காணலாம். அவ்வகை நீராடலால் ஏற்படும் பயனைப் போகர் குறிப்பிடக் காணலாம்.
நெல்லி, கடுக்காய், மிளகு, மஞ்சள், வேம்பின்
வித்து ஆகிய ஐந்துடன் கையான் தகரைச் சாறும் கூட்டி அரைத்து தலைக்குத்
தேய்த்து வாரம் இருமுறை நீராடி வந்தால் கண் குளிர்ச்சியாகும் கண் எரிச்சல்
நீங்கும், தலைவலி போகும், மண்டைக் குத்து தீரும். உடல் கல்தூண்போலாகும் என்று, நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்வதுடன் உடலைப் பேணவும் வழி உரைக்கப் பட்டது.
இம்முறையைக் ‘காயாதி கற்பம்’ என்பர்.
No comments:
Post a Comment