அன்புடையீர்,
அனைவருக்கும் இனிய வணக்கம். வர்மம் பற்றி காண்போம்.
அனைவருக்கும் இனிய வணக்கம். வர்மம் பற்றி காண்போம்.
இளமைக் காலங்களில் இளைஞர்கள் மன மகிழ்ச்சிக்காக விளையாடும் போதும், போர் வீரர்கள் போர்புரியும் போதும், வர்ம நிலைகளில் தெரிந்தோ தெரியாமலோ ஏற்படுகின்ற வர்ம அடிகள், அவர்களின் வாழ்க்கைப் பாதையையே மாற்றிவிடக் கூடிய கொடுமை நிறைந்ததாக இருக்கிறது.
எனவே அதற்குரிய வர்ம மருத்துவக் கல்வியால், அறிவால், பயிற்சியால், நுட்பமான உணர்வால் முதிர்ந்த நிலையுள்ளவராக மருத்துவர் இருக்க வேண்டும் எனத் தெரிகிறது.
“ஒடிவு முறிவுக்குரிய மருத்துவம் செய்பவர் படுவர்மம் 18–ம், தொடுவர்மம் 96உம் சரநிலைகள், இடகலை, பிங்கலை, சுழுமுனை முதலியவற்றின் இயக்கங்களைக் கண்டறிவதில் நன்கு தேர்ந்தவராக இருக்க வேண்டும்.
வர்மத்தின் நிலைகளை அறிவதுடன், மயக்கம், கபம், சீதம், வியர் வை, சுவாசம் முதலிய குறிகுணங்களையும் கண்டறிய வேண்டும”
என்று, வர்ம மருத்துவம் செய்யத் தொடங்குமுன், மருத்துவன் கண்டறிய வேண்டிய தேர்வுமுறை அடிப்படைகள் எடுத்துரைக்கப் படுகின்றன.
படுவர்மங்களுக்கு, வர்மம் கொண்ட நேரத்திலிருந்து எவ்வளவு நேரத்துக்குள் மருத்துவம் பார்க்க வேண்டும் என்னும், ‘அவசரச் சிகிச்சை’ முறை
குறிப்பிட்டுக் காட்டப் பட்டுள்ளது. அக்காலத்தைக் கடந்து விட்டால்
நோயாளியைக் காப்பாற்ற முடியாது எனத் தெளிவாக உரைக்கப்படுகிறது.
பருவத்தைப் பாழாக்கும் வர்மம்
வர்மங்களில் சில மரணத்தைத் தரும். சில கடுமையான நோயையும் துன்பத்தையும் தரும் என கூறப்பட்டது. ஆண்களை அலியாகவும், பெண்களை மலடியாகவும் ஆக்கக் கூடிய வர்மம் ஒன்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
எலும்பு முறிவு வகைகள்
1. சாதாரண முறிவு (Simple Fracture).
2. கலப்பு முறிவு (Compound Fracture).
3. சிக்கலான முறிவு (Complicated Fracture).
4. நொறுக்கப் பட்ட முறிவு (Comminuted Fracture).
5. முறிந்த பாகம் இன்னொரு பாகத்துடன் மாட்டிக் கொண்டு
அசையாதிருப்பது (Impacted Fracture).
6. பச்சைக் கொம்பு முறிவு (Green Stick Fracture).
7. தன்னில் தானே முறிவது (Spontancous Fracture).
8. பள்ளம் ஏற்படும் முறிவு (Depressed Fracture).
எனப்படும்.
இத்தகைய வர்ம முறைகளால் நரம்பு முறை மருத்துவமும், எலும்பு முறை மருத்துவமும், ஒருங்கிணைந்து தமிழ் மருத்துவத்தில் இடம் பெற்று ‘வர்ம மருத்துவம்’ என்று போற்றக் கூடியதாக அமைந்திருக்கிறது.
வர்மம் கற்று தருவீர்களா
ReplyDelete