அன்புடையீர்,
அனைவருக்கும் இனிய வணக்கம்.
அனைவருக்கும் இனிய வணக்கம்.
நோய்களின் எண்ணிக்கை பற்றி அறிந்து கொள்வோம்.
வாத, பித்த, ஐயங்கள் அவற்றினால் உண்டாகும் நோய்களும் அவை அல்லாத வேறு பல காரணங்களினால் உண்டாகும் நோய்களும் தொகுத்துக் கூறப்படுகின்றன.
"" குறியுல கேத்தி தானே குறித்தநா லாயிரத்தி
நறிவரு நானூற்று நாற்பத் தெட்டன""
என்று, மனித உடலில் தோன்றக் கூடிய நோய்களின் தொகை, 4448 என சித்த மருத்துவம் கண்டறிந்துள்ளது.
உடம்பின் நீளம் எட்டுச் சாண் அளவு, அல்லது தொண்ணூ<ற்று ஆறு அங்குலம் எனவும், உடம்பில் அமைந்துள்ள நாடிகள் எழுபத்திரண் டாயிரம் எனவும் உடம்பில் உற்ற நோய்களின் சுருக்கம் எண்ணூ<ற்றுத் தொண்ணூ<று எனவும் அதை ஐந்தால் பெருக்கினால் (890 து 5 = 4450) நாலாயிரத்து நானூற்று ஐம்பது என நோயின் தொகையும் உரைக்கப்பட்டுள்ளன.
உறுப்புகளும் நோய்களும்
மருத்துவ நூலார் கண்டறிந்த நோய்கள் 4448. அவை, உடல் முழுவதும் தோன்றுவதாகும். உடலிலுள்ள உறுப்புகள் சிலவற்றில் இந்த நோய்கள் உண்டாகுமென்றும், நோய் உண்டாகும் உறுப்புகளாகப் பத்தொன்பதைக் கூறி, அவை ஒவ்வொன்றிலும் தோன்றக் கூடிய நோய்களின் எண்ணிக்கை பிரித்துக் கூறப்படுகிறது.
1. தலை 307
2. வாய் 18
3. மூக்கு 27
4. காது 56
5. கண் 96
6. பிடரி 10
7. கன்னம் 32
8. கண்டம் 6
9. உந்தி 108
10. கைகடம் 130
11. குதம் 101
12. தொடை 91
13. முழங்கால் கெண்டை 47
14. இடை 105
15. இதயம் 106
16. முதுகு 52
17. உள்ளங்கால் 31
18. புறங்கால் 25
19. உடல்உறுப்பு எங்கும் 3100
ஆக 4448
என்பனவாகும். இவ்வாறு உறுப்புகள் தோறும் உண்டாகும் நோயின் எண்ணிக்கையைப் பிரித்துத் தொகைப்படுத்திக் கூறியிருப்பது, சித்த மருத்துவத்தின் தொன்மை, வளர்ச்சி ஆகிய இரண்டையும் காட்டுவதாகக் கொள்ளலாம்.
No comments:
Post a Comment