Saturday, 25 July 2015

கபம் என்னும் ஐய நோய் 96..

அன்புடையீர்,
      அனைவருக்கும் இனிய வணக்கம். கபம் என்னும் ஐயம் என்னும் கோழை நோய் வருவதற்கான காரணங்களை அறிந்துகொள்வோம்.

ஐயம் என்னும் கபம் அதாவது கோழை நோய் வருவதற்கான காரணங்கள்...
ஐயம் என்னும் கப நோயின் எண்ணிக்கை 96 எனப்படுகிறது. 
        ஐயம் என்னும் கபம்  நீர்த்தன்மையுடையதாக இருப்பதனால் குளிர், குளிர்ந்த பொருள், குளிர்ச்சி என்று ஐயம் வரும் வழியைக் குறிப்பர். அவை, பனி, பலவகை நீர், காலையில் குளிக்காதது, காமம், மருந்தீடு, மணம், சயம், மருவல், சுத்தி செய்யாத மருந்து, பழித்த தோசம், தோசபானம், மழையில் நனைதல், தூக்கம், விஷம், போகம் மிகுதி, அலைச்சல், மந்தம் போன்றவை ஐய நோய்க்குரிய குற்றங்கள் என்பர்.
 
     ஐயம் அழிக்கும் தொழிலுக்குரியதாகையால், வாதத்தின் அளவில் கால் அளவே ஐயம் இருக்க வேண்டும் என்கிறது நாடி நூல். எனவே கெடுதல்/அழிதல் குறைவாக இருந்தால், தானே பாதுகாத்துக் கொள்ளவும் உயிர்வாழவும் முடியும்? அதனால் தான் உடலில் சேரும் பொருளும் கெடுதலைத் தரக் கூடிய பொருள்களாக இருக்கக் கூடாது என்று கருதினர். 
 
           மேற்கண்ட பொருள்களில், சுத்தி செய்யாத அவிழ்தம், பழித்த தோசம், தோச பானம் ஆகியவை ஒவ்வாமையைக் குறிப்பதாகும். ஒவ்வாமை உடலுக்குக் கேட்டினை விளைவிக்கும் என்பதனை அறிந்தே, 
 
      தமிழ் மருத்துவம் சுத்தி என்னும் தனிப் பிரிவையே மருந்துத் தயாரிப்பில் வைத்துள்ளது. சுத்தியில்லையேல் சித்தியில்லை என்பது குறிப்பிடத் தக்கது. 
 
         சுத்தம் என்னும் பழக்கமும் ஐயத்திலிருந்து விடுபடச் செய்யும். ஒவ்வாமை எல்லாம் ஒவ்வாது என்பதும் ஒவ்வாதது. சிறிய அளவு இருந்தால் தான், அது இன்பம். அதனால் அது சிற்றின்பம். அளவு மிகுந்தால் சேரும் துன்பம் எனக் கூறுவதாகக் கருத வேண்டும்.

No comments:

Post a Comment