Saturday, 25 July 2015

நோய் தேர்வு முறை

அன்புடையீர்,
 அனைவருக்கும் இனிய வணக்கம்.சித்த மருத்துவத்தில் நோய் அறிதல் முறை பற்றிக்காண்போம்.
 
சித்த மருத்துவத்தில் நோய் தேர்வு முறை
                    சித்த மருத்துவத்தில் குறிப்பிடப்படும் தேர்வு முறைகள் எட்டுவகைப்படும். அவை நாடிபரிசம்நாக்குநிறம்மொழிவிழிமலம்மூத்திரம் என்பன. இவை எட்டும் மருத்துவனின் கருவிகளாகக் கூறப்படுகின்றன.
"" நாடிப்பரிசம் நாநிறம் மொழிவிழி
மலம் மூத்திரமிவை மருத்துவ ராயுதம்''
என்றும்,
மெய்க்குறி நிறந்தொனி விழிநா விருமலம் கைக்குறி’’ என்றும் குறிப்பிடுவர்.
எண்வகைத் தேர்வு என்பது பிணியை அறியும் முறையைக் குறிக்கிறது. 
             உடலைப் பிணிப்பது நோய் என்பதனால்நோயைப் பிணி என்னும் சொல்லாலும் குறிப்பிடுவர். நோயறிதல் என்பதுநோயைப் பற்றித் தெரிந்து கொள்ளும் முறை எனலாம்.

No comments:

Post a Comment