Saturday, 25 July 2015

வாத நோய்கள் 84..

அன்புடையீர்,
     அனைவருக்கும் இனிய வணக்கம்.

வாத நோய் வருவதற்கான காரணங்கள்....
வாத நோய்கள் 84 ஆகும். 
 
        மலச்சிக்கல், பெருந்தீனி, வாழைரசம், பலாப்பழம், மலைவாழை, மொந்தன் வாழை, கல்வாழை, வத்தக்காய், நந்திக்காய், பரங்கிக் காய், வாழைத்தண்டு, எருமைமோர், தயிர், வெண்ணெய், உணவு உண்டவுடன் போகம், புளி மிகுதி, கொள்ளுடன் பயறு, உளுந்து, தென்னைபனங்கள், போகம் செய்யும் போது பால்பழம் உண்ணல், முள்ளங்கி, கடலை, மொச்சை, முற்றிய அவரை, முற்றிய முருங்கை, முக்கனி, பால், சோறு, வெள்ளரிக் காய், செம்மறியும் உடும்பும் சேர்த்துண்ணல் ஆகியவை வாத நோயை வருவிக்கும் வழிகளாகக் கூறப்படுகின்றன.
 
        மேற்கண்ட உணவும், உணவின் கலப்பும் வாத நோயை வருவிக்கும் என்றதனால், அவை உணவுப் பொருள் என்பதையும், முற்றிலும் விலக்குதற்கு உரிய பொருள்களல்ல என்பதையும் கருத வேண்டும். 
 
       இவ்வகை உணவுகள் புளிப்புச் சுவைக்குரிய உணவுகள் எனத் தெரிவதால், அவை அளவாகவும் புளிச்சுவையை மாற்றக் கூடிய உணவுகளை உண்டால் அது சமநிலையடைந்து நோயை உருவாக்காமல் இருக்கு மெனலாம்.

No comments:

Post a Comment