Saturday, 25 July 2015

தொகுப்பு மூலிகைகள் ..

அன்புடையீர்,
       அனைவருக்கும் இனிய வணக்கம்.

       ஏலாதி :
          சுக்கு, இலவங்கம், சிறுநாவல் பூ, மிளகு, திப்பிலி, ஆகிய ஆறு மருந்துப் பொருள்களும் முறையே 1,2,3,4,5,6 என்ற எடை அடிப் படையில் கலந்ததற்கு ஏலாதி எனப்பெயர்.
 
திரிகடுகம் : 
    சுக்கு, மிளகு, திப்பிலி இம்மூன்றும் சேர்ந்தது திரிகடுகம் எனப்படும்.
 
சிறுபஞ்சமூலம் :          கண்டங்கத்திரி, சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெரிஞ்சில்நெரிஞ்சில் இவ்வைந்தின் வேர்கள் சிறுபஞ்ச மூலமெனக் கருதப்பெறும்.

தொகுப்பு மூலிகைகளாகக் காணப்படுபவை, திரிகண்டம், திரிஏலம், திரிகந்தம், திரிகாயம், திரிகாரசிகம், திரிகுமரி, திரிசாதம், திரிநிம்பம், திரிபலை, திரிபழம், திரிமஞ்சள், திரிமதம், திரிமூலம் எனவும்,
இரு ஓமம், இருகரந்தை, இருகுமிழ், இருசங்கன், இருசண்பகம், இரு சந்தனம், இரு சீரகம், இருதொட்டி, இரு நன்னாரி, இரு நாபி, இரு நிம்பம், இரு நெரிஞ்சில், இரு நொச்சி, இருபகம் எனவும்,
பஞ்ச கந்தம், பஞ்சகமம், பஞ்சகற்பம், பஞ்சகசாயம், பஞ்ச காயம், பஞ்ச காரகம், பஞ்ச கோலம், பஞ்ச சருக்கரை, பஞ்ச சீதம், பஞ்ச தரு, பஞ்ச நிக்தம், பஞ்ச திரவியம், பஞ்ச தீபாக்களி, பஞ்ச நிம்பம், பஞ்ச பட்டை, பஞ்ச பத்திரம், பஞ்ச லோதகம், பஞ்ச பாணப்பூ, பஞ்ச பூதமூலம், பஞ்ச பூடணம், பஞ்ச முட்டி, பஞ்ச மூலம், இடைப்பஞ்ச மூலம், பெரும் பஞ்ச மூலம், புற்பஞ்சமூலம், பஞ்ச மூலிகற்பம், பஞ்ச மூலிக் குடிநீர், பஞ்ச மூலித்தைலம், பஞ்ச லோகச் சாயம், பஞ்ச வர்க்கம், பஞ்ச வலக்கம், பஞ்சவாசம், பஞ்ச வில்வம், பஞ்சாக்கினிக் கொடி, பஞ்சாமிலம் எனவும் மருத்துவத் தொகையகராதி தெரிவிக்கக் காணலாம்.


No comments:

Post a Comment