Saturday, 25 July 2015

நோயறிய எட்டுவகைத்தேர்வுகள் ....

அன்புடையீர்,
        அனைவருக்கும் இனிய வணக்கம்.

          சித்த மருத்துவத்தில் நோயாளிக்கு உற்ற நோயின் தன்மையை அறியவும்நோயின் வகையை அறியவும் எண்வகைத் தேர்வுகள் பயன்படுகின்றன. அவ்வாறான தேர்வுகள் மூலம் நோயாளியின் நிலையை அறிய முயல்கின்றனர்.
 
 அவ்வகையில் ஒலிஉணர்வுவடிவம்சுவைநாற்றம்மலம்மூத்திரம்எச்சில்விந்து ஆகிய ஒன்பது வகைகளை  தேரையர் நூல் விவரிக்கிறது.. அதன் விவரம் பின்ருமாறு..
 
1. ஒலித்தேர்வு
            நோயுற்றவர் பேசுகின்ற போது அவரின் பேச்சு அவரின் இயல்பு நிலையினிலிருந்து மாறுபட்டுவீணையினது நாதத்தைப் போலும்கின்னரி இசைப்பது போலவும்குழல் இசைப்பது போலவும் சன்னமாகவும்நாயின் சத்தத்தைப் போலவும்ஈச்சு கொட்டுகின்றதைப் போலச் சத்தமும்மலை எதிரொலிப்பதைப் போன்ற ஓசையும்கிணற்றில் பேசுவது போலவும்எக்காளம் போன்ற ஓசையும்பேரியம் கொட்டுகின்றதைப் போன்ற முழக்கமும் இருக்குமேயானால் வீணை யிசைக்கு ஒரு நாழிகையிலும்கின்னரத்திற்கு பத்து நாழிகையிலும்குழலோசைக்கு நூறு நாழிகையிலும்நாயோசைக்கு ஆயிரம் நாழிகையிலும்ஈச்சு கொட்டுகின்ற ஓசைக்கு இரண்டாயிரம் நாழிகையிலும்மலையோசைக்கு மூவாயிரம் நாழிகையிலும்எக்காளத்திற்கு நாலாயிரம் நாழிகையிலும்கிணற்றோசைக்கு ஐயாயிரம் நாழிகையிலும்பேரிய வோசைக்கு ஆறாயிரம் நாழிகையிலும்இறுதி வரும் என்று உரைக்கலாம்.
      " வீணையிசை நத்தோசை வேயோசை நாயோø
வீணையிசை நத்தோசை வெற்போசைவீணையிø
தாரையியம் பேரியியந் தப்பாதொன் றாதிலக்கந்
தாரையியம் பேர்கலைவி தான்''
 
           என்பதனால்ஒலித்தேர்வு முறையினால் நோயைக் காணாமல் நோயாளிக்கு இறுதி நாள் எத்தனை நாழிகையில் வரும் என்பது கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடற்குரியது.
 
2. உணர்வுத் தேர்வு
       நோயாளியை மருத்துவன் தொடுகின்ற போதுமருத்துவனின் உணர்வில் நோயாளியின் உடல்முதலையினது முதுகைப் போல இருக்குமானால் பன்னிரண்டு நாளிலும்ஆமையினது முதுகு போல இருக்குமானால் ஐம்பத்தாறு நாளிலும்மீனினது வால்புறம் போல இருக்குமானால் நாற்பத்தைந்து நாளிலும்குளிர்ச்சி அதிகமாயிருக்கு மானால் பன்னிரண்டு சாமத்திலும்வெப்பமும் சீதளமும் தொந்தித்து இருக்குமானால் ஐம்பத்தாறு சாமத்திலும்அதிக காங்கை இருக்கு மானால் நாற்பத்தைந்து சாமத்திலும்மறைவிடத்தைப் பார்க்கும் போது யானைத் தோலைப் போல வன்மையாயிருந்தால் பன்னிரண்டு நாழிகையிலும்மரத்தைப் போன்றிருந்தால் ஐம்பத்தாறு நாழிகை யிலும்கல்லைப் போன்றிருந்தால் நாற்பத்தைந்து நாழிகையிலும் இறுதிவரும். இரத்த நாளமானாது தாமரைக் கொடியின் முள்ளைப் போலிருக்கு மானால் பன்னிரண்டு விநாடியிலும்தச்சு உளிபோல கூர்மையாக இருக்குமானால் ஐம்பத்தாறு விநாடியிலும்ஆரம்போலக் கருக்குடன் இருக்குமானால் நாற்பத்தைந்து விநாடியிலும் இறுதி வருமென்று உரைக்கலாம்.
உணர்வுத் தேர்வு முறைகள் குறிப்பிட்டுக் காட்டுகின்ற தோலில் தோன்றும் வேறுபாடுகள் அனைவராலும் அறியக் கூடியதாக இருந்தாலும்அவ்வாறு தோன்றுவதற்குரிய அடிப்படைகள் என்னவென்னு அறியமுடியவில்லை. அறிவியல் அடிப்படையாக அமைகின்றனவா அல்லது அனுபவம் அடிப்படையாக அமைகின்றனவா? என்பது கண்டறியப்பட வேண்டிய தெனலாம்.
 
3. வண்ணத் தேர்வு
       நோயாளியைக் காணுகின்ற மருத்துவன் கண்களுக்குநோயாளி யின் வடிவம் சூரியனைப் போலச் சிவந்த வண்ணமும்மினுமினுப் பும் தோன்றுமேயானால் இரண்டு மாதத்திலும்சந்திரனைப் போல வெள்ளை நிறமுமும் மினுமினுப்பும் தோன்றுமேயானால் மூன்று மாதத்திலும்செவ்வாயைப் போலச் சிவந்த நெருப்பு நிறமும் மினுமினுப்பும் தோன்றுமேயானால் நான்கு மாதத்திலும்வியாழனைப் போல பொன்னிறமென்னும் மஞ்சள் நிறம் தோன்று மேயானால் ஐந்து மாதத்திலும்வெள்ளியைப் போல வெண்ணிறமும் மினுமினுப்பும் தோன்றுமேயானால் ஆறு மாதத்திலும்காரியைப் போலக் கருமை நிறமும் மினுமினுப்பும் தோன்றுமேயானால் ஏழு மாதத்திலும்உமையாள் போலக் கறுத்த பச்சை நிறமான நீலச் சாமள நிறத்துடன் மினுமினுப்பும் தோன்றுமேயானால் எட்டு மாதத்திலும்வண்ணம் தோன்றாமல் மினுமினுப்பு மட்டும் தோன்றுமேயானால் அந்த நிமிடமே இறுதி வரும் என்று உறுதியாகக் கூறலாம்.
“ என்றுமதி செவ்வாய் இரணியன்சுங் கன்காரி
யென்றுமதி செவ்வாய் இவையோடுமைஎன்றுமதி
அஞ்சுமா தக்கணமேல் ஆறுதிங்க ளாமினுக்கே
அஞ்சுமா தக்கணமே யாம்.''
இச் செய்யுளில் கிழமைகளையும் அவற்றிற்குரிய கோள்களின் வண்ணத்துடன் ஒப்பிட்டுக் காட்டிநோயாளியின் இறுதி நாள் எண்ணிக் காட்டப்பட்டுள்ளது. புதன் குறிப்பிடப்படவில்லை. அதற்காக உமை என்று உரைக்கப்பெற்றிருப்பதும் கவனத்திற்குரியது.
 
4. சுவைத் தேர்வு
          நோயுற்றவர் அறுசுவைப் பொருள்களை உண்ணும் போது அந்தச் சுவை தோன்றாமல் வேறு சுவைதோன்றுவதாகக் கூறினால்அதனால் நோயுற்றவர் என்ன நிலையில் உள்ளார் என்பதைத் தெரிவிப்பதே சுவைத் தேர்வாகும்.
ஒரு சுவைப் பொருளை உண்ணும் போதுஅதற்குரிய சுவை தோன்றாமல்,வேறு எந்தப் பொருளை உண்டாலும் அந்தச் சுவை தோன்றுவதாகக் கூறினால்நோயின் முதிர்ச்சியால் எத்தனை நாளில் இறுதிவரும் என்பதை அறியலாம்.
கசப்புச் சுவையை உண்ணும் போது கசப்புத் தோன்றாமல் மற்றெந்தப் பொருளை உண்டாலும் கசப்பதாகக் கூறினால் ஏழு நாளிலும்இனிப்புச் சுவை தோன்றாவிட்டால் ஒரு திங்களிலும்புளிப்புச் சுவை தோன்றாவிட்டால் பதினைந்து நாளிலும்காரச் சுவை தோன்றாவிட்டால் அரை நாளிலும்கரிப்புச் சுவை தோன்றாவிட்டால் ஒரு நாளிலும்துவர்ப்புச் சுவை தோன்றாவிட்டால் ஒரு நாழிகையிலும் இறுதி வருமெனலாம். நோயாளியைப் பற்றிக் கொண்ட நோய் உயிரை வாங்கிக் கொண்டு போக நினைத்திருக்கிற காலத்தை இவ்வாறு அறிய வேண்டும்
இச்சுவைத் தேர்வு மூலம் நோயாளியின் நிலைமையை மருத்துவர் மட்டுமல்லமற்றவர்களும் அறியக்கூடியதாக அமைந்திருக்கக் காணலாம். நோயாளியின் அனைத்து நிலைகளையும் ஆராய்ந்து நிலை மையை அறிய உணர்த்தப் பெற்ற இவ்வாறான முறைகள் அரியவை யாக உள்ளன.
 
5. நாற்றத் தேர்வு
         மலர்களிடத்து எழுகின்ற மணத்தை நோயாளி நுகர்ந்து பார்த்துஅந்த மலருக்குரிய மணம் தோன்றாமல் வேறு மணமாகத் தோன்றுவ தாகக் கூறினால் நோயாளியின் நிலையை அறிவிப்பது நாற்றத் தேர்வாகும்.
மூங்கிற்பூ மணம் அறியாவிட்டால் ஏழு வினாடியிலும்,
வேங்கைப்பூ மணம் அறியாவிட்டால் ஏழு நாழிகைக்குள்ளும்,
தாழம்பூ மணம் அறியாவிட்டால் ஏழு சாமத்திற்குள்ளும்
அத்திப்பூ மணம் அறியாவிட்டால் ஏழு நாளிலும்,
கொன்றைப்பூ மணம் அறியாவிட்டால் ஏழு மாதத்திற்குள்ளும்,
சிறுசண்பகப்பூ மணம் அறியாவிட்டால் பதினான்கு மாதத்திலும்,
மராமரப்பூ மணம் அறியாவிட்டால் மூன்று ஆண்டிற்குள்ளும்
இறுதி வருமென்று அறிந்து பார்த்துத் துணிவுடனே உரைக்க வேண்டும். என்று உறுதியாக உரைப்பதைக் கொண்டு மருத்துவ நூலாரின் ஆழ்ந்த புலமையும் ஆய்வும் தெளிவாகிறது.
 
6. மலத் தேர்வு
         நோயாளியின் மலம் எந்த வடிவிலும்வண்ணத்திலும்தன்மை யிலும் இருக்கிறது என்றறிந்து நோயாளியின் நிலையை அறிவிக்கிறது.
வெள்ளாட்டுப் புழுக்கையைப்போல உலர்ந்து வரண்டிருந்தால்இறுதி அருகிலுள்ள தெனலாம். சற்றுக் குழம்பு போலிருந்தால் மிக நன்று. போதுமான நீர்த்தன்மையுடையதாய் கடினமுமில்லாமல்தளர்ச்சியு மில்லாமல்வெண்மையாயுமில்லாமலிருந்தால் மிக நன்று. செம்பு நிறம் மத்திமமாகவும்கறுப்பு நிறம் தீயதாகவும் இருக்கும். இத்தேர்வு அதிக ஆய்வும் விளக்கமுமில்லாமல்சாதாரணத் தோற்றத் தைக் கொண்டு பொதுவாக உணரப்படும் கருத்தைப் போலுரைக்கப் பெற்றவையாகும்.
 
7. நீர்த் தேர்வு
       நோயாளியின் சிறுநீரின் நிறத்தைக் கொண்டு அறியப்படுகின்ற கருத்து இங்கு விளக்கப்படுகிறது.
“ மாணிக்கம் போன்று சிவப்பாக இருந்தால் அசாத்தியம்
வெண்ணிறமானால் பொல்லாங்கு. தேன் போன்றிருந்தால் சாத்தியம்
ஆனாலும் நாளாகும்.
பொன்னிறமானால் சாத்தியம் ஆனாலும் நன்றில்லை''
இங்குக் குறிப்பிடப் பெற்ற நான்கு வகைகளில் இரண்டு அசாத்தியம் இறுதி நிச்சயமென்றும்இரண்டு சாத்தியம் ஆனாலும் நாளாகு மென்று ஒன்றிலும்மற்றொன்றில் சாத்தியம் ஆனாலும் நன்றில்லை என்பதைக் கொண்டு இறுதியாகக் கூறப்பெற்றதும் அசாத்தியம் போலவே தோன்றுகிறது. மூன்றாவதாகக் கூறப்பெற்ற தேன் போன்ற நிறத்தினை மட்டுமே நம்பி மருத்துவம் பார்க்கலாம் என்று அறிவிப்பதாக இருக்கிறது.
நீர்க்குறி
நோயாளியிடமிருந்து பெறப்படுகின்ற சிறுநீர் வண்ணத்தைக் கொண்டுநோயாளியின் உடல்நிலை எந்த நிலையில் இருந்து வருகிறது என்பதைக் கண்டறியவே இவ்வாறான முறை சித்த மருத்துவத்தில் கையாளப் படுவதாகத் தெரிகிறது. சிறுநீரைக் கொண்டு ஆய்வுக்கூட முறையில் நோயை அறிய (அ) உடலில் இருக்க வேண்டிய சத்துப் பொருள்கள்உயிர்ப் பொருள்தாதுப் பொருள் போன்றவை இருக்கின்ற அளவு என்ன என்று கணித்தறியப் பயன்படுகிறது. இவ்விரண்டு வகையிலும் சிறுநீரைப் பயன்படுத்தினாலும் கண்டறியப்படும் அடிப்படையில் வேறு வேறாகத் தோன்றும்.
சித்த மருத்துவம் ஆராயும் சிறுநீர்த் தேர்வு முறையில்சிறுநீரின் அடிப்படையில் மஞ்சள்சிவப்புபச்சைகறுப்புவெண்மை என்னும் ஐந்து வண்ணங்கள் கொள்ளப்பட்டுஇவற்றின் பிரிவுகளாக இருபத்தொறு வண்ணங்கள் ஆராயப்படுகின்றன.
சிறுநீரின் பொதுத் தன்மையாக நிறம்எடைநாற்றம்நுரைகுறைதல் என்னும் ஐந்தினைக் குறிப்பிடுவர்.
சிறுநீர்த் தேர்வினால்உடலின் வெப்பக் குணங்களும்அதனால் உண்டாகக் கூடிய நோய்களும்வாதம்பித்தம்ஐயம் ஆகியவற்றினால் உண்டாகக் கூடிய உடலின் மாற்றமும் அறிப்படுகிறது.
சிறுநீர்த் தேர்வினால் கருப்பைஆண்குறியில் புண்கல்லடைப்புப் போன்றவற்றை அறியக் கூடும்.
“ காணிதில் சீழும் கலந்து இழிமணம் உறின்
கருப்ப நாபிகள் உளும் காமநா ளத்துளும்
விரணமுண்டு இன்றேல் எய்தும் அஸ்மரி யலது
இருத்தலே திண்ணம் எனமனத்து எண்ணே.''
சிறுநீரில் சீழும் நாற்றமும் வீசினால்கருப்பைகொப்பூழ்ஆண் குறியில் புண்ணும்கல்லடைப்பும் திண்ணம் என்கிறது.
நெய்க்குறி
சிறுநீரில் எண்ணெய் விட்டு பார்த்து சோதிக்கும் முறை வேறு மருத்துவத் துறைகளில் இருப்பதாகத் தெரியவில்லை. இம்முறை சித்த மருத்துவத்துக்கு மட்டுமே உரியது என்பது குறிப்பிடத்தக்கது.
எண்வகைத் தேர்வு முறைகளில் நெய்க்குறி என்னும் தேர்வு முறை சிறப்பானது என்கிறார் தேரையர். சிறுநீரில் ஒரு துளி அளவு நல்லெண்ணெய் விட்டுஎண்ணெய் நீரில் எவ்வாறு பிரிகிறது என்றும்தோன்றுகிறது என்றும் கண்டுநோயின் குற்றத்தைக் கண்டறிவது இம்முறை. எண்ணெய்த்துளி சிறுநீரில்பாம்புமோதிரம்முத்துசங்குஆசனம் போன்ற வடிவங்களாகக் காணப்பட்டால் அவற்றினால் நோய் கணிக்கப்படும். நோயாளியின் சிறுநீரும் எண்ணெயும் வேறுபாடின்றி இரண்டும் ஒன்றாகக் கலந்தால்உயிர் நீங்கிவிடும் என்று கணிக்கப்படுகிறது.
சிறுநீரின் இயல்பான வண்ணம் தெளிந்திருந்தால் வாத நோயும்மஞ்சளானால் பித்த நோயும்,வெளுத்து நுரைத் திருந்தால் ஐய நோயையும் காட்டுவதாக இருக்கும். சிறுநீரின் இந்த வண்ணம் எக்காலத்திலும் மாறாமல் இருக்குமென்றும் உரைக்கப்படுகிறது.
 
8. எச்சில் தேர்வு :
         நோயாளியின் உமிழ்நீர் எட்டுவகையாகப் பிரிக்கப்பட்டுஅதனால் அறியப் பெறுவன உத்தமம்மத்திமம்அதமம் என்னும் மூன்று வகையில் கூறப்படுகிறது.
 
1. “உமிழ் நீரானதுஇளநீர் போன்றிருந்தால் முதன்மையான உத்தமமென்றும்,
 
2. பால் போன்றிருந்தால் இரண்டாவது உத்தமமென்றும்,
 
3. வெண்ணெய் போல் அழுந்தி வெண்மையா யிருக்குமானால் மத்திமத்தில் முதன்மை யென்றும்,
 
4. தயிரைப்போல் அழுத்தமும் வெண்மையும் இருக்குமானால் மத்திமத்தில் இரண்டாவதென்றும்,
 
5. குதிரை வாயிலிருந்து வெளியாகும் நுரைபோ லிருந்தால் அதன்மத்தில் முதன்மையென்றும்,
 
6. களியைப் போலிருந்தால் அதமத்தில் இரண்டாவ தென்றும்,
 
7. ஓட்டிலே சுடப்படும் ஓட்டடை போலிருந்தால் அதமத்தில் முதன்மையான அசாத்தியமென்றும்,
 
8. மாவைப்போல வறட்சியாக இருக்குமானால் அதமத்தில் அதமமான அசாத்தியமென்றும்இறுதி மிகவும் அருகில் இருக்குமென்றும் எட்டு வகைகள் உரைக்கப்படுகின்றன.
 
விந்துத் தேர்வு:
          விந்துத் தேர்வும் எச்சில் தேர்வைப் போலவே உத்தமம்அதமம்மத்திமம் என்கிற முறையில் உரைக்கப்படுகிறது. அதாவது நோயாளியின் விந்து,
 
1. “வெண்ணெய் போன்றிருந்தால் உத்தமத்தில் முதன்மை,
 
2. தயிரைப் போன்றிருந்தால் உத்தமத்தில் இரண்டாவது,
 
3. பால்போன்றிருந்தால் மத்திமத்தில் முதன்மை,
 
4. மோர் போன்றிருந்தால் மத்திமத்தில் இரண்டாவது,
 
5. தேன் போன்றிருந்தால் அதமத்தில் முதன்மை,
 
6. நெய்போன்றிருந்தால் அதமத்தில் இரண்டாவது,
 
7. கள் போன்றிருந்தால் அதமத்தில் முதன்மை ஆனாலும் பொல்லாங்கு (தீமை)
 
8. தண்ணீர் போன்றிருந்தால் அதமத்தில் அதமம். முயற்சி வேண்டாம் என்று கைவிடலாம்
        என்று கூறப்படுகிறது. 
 
           நோயாளியின் உயிர் பிரியும் போது இரத்தமும் விந்துவும் நீர்த்துத் தண்ணீரைப்போல வெளியாகும். அவ்வேளையில் நோயாளியைக் காப்பாற்ற முயல்வது வீண் என்று கூறப்படுகிறது.

No comments:

Post a Comment